Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Coimbatore FinTech Hub: கோவைக்கு அடிச்சது ஜாக்பாட்! ரூ.400 கோடியில் அமையப்போகும் ஃபின்டெக் திட்டம் - முழு விவரம்!

Coimbatore FinTech Hub: கோவைக்கு அடிச்சது ஜாக்பாட்! ரூ.400 கோடியில் அமையப்போகும் ஃபின்டெக் திட்டம் - முழு விவரம்!

ABP Nadu 1 week ago

மிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சட்டமன்ற விதி 110-இன் கீழ் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலமாக கோயம்புத்தூரில் புதிய 'டிஜிட்டல் நிதி மையம்' (Coimbatore FinTech Hub) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகவுள்ள இந்த திட்டம், கோவையின் தொழிற்துறை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

உலகத் தரத்திலான அதிநவீன வசதிகள்

கோவையில் அமையவுள்ள இந்த டிஜிட்டல் நிதி மையத்தில் சர்வதேசத் தரத்திலான அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறவுள்ளன. பிரம்மாண்டமான அலுவலக இடங்கள், தொழில் தொடங்க விரும்பும் புதிய தொழில் முனைவோருக்கான புத்தொழில் (Start-up) நிறுவன வசதிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நவீன ஆய்வகங்கள் ஆகியவை இங்கு அமைக்கப்படவுள்ளன. மேலும், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களும் இதில் பிரத்யேகமாகச் செயல்படவுள்ளன.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு

இந்த டிஜிட்டல் நிதி மையத்தின் மூலம் சர்வதேச அளவிலான முதலீடுகளைக் கோவையை நோக்கி ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுவதோடு, நமது மாநிலத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உயர்தர மற்றும் உயர்மட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த பிரம்மாண்ட திட்டம் கோவை மண்டலத்தின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பெரிதும் துணைபுரியும்.

Lஃபின்டெக் (FinTech) நிறுவனங்களின் முக்கியத்துவம்

நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே ஃபின்டெக் (FinTech) எனப்படுகிறது. பாரம்பரிய வங்கிச் சேவைகளை நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்றியமைப்பதில் ஃபின்டெக் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எளிய முறையில் செல்போன் மூலமாகவே பணப் பரிவர்த்தனை செய்வது, உடனடி கடனுதவி, டிஜிட்டல் முதலீடுகள் மற்றும் காப்பீட்டுச் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிக விரைவாகக் கொண்டு சேர்ப்பது ஃபின்டெக் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

மேலும், சிறு தொழில்கள் மற்றும் வணிகர்கள் மிக எளிதாக நிதிச் சேவைகளைப் பெற ஃபின்டெக் நிறுவனங்கள் வழிவகுக்கின்றன. காகிதமில்லா, தடையற்ற மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க இத்தகைய நிதிநுட்ப நிறுவனங்கள் இன்றியமையாதவை ஆகும். கோவையில் இத்தகைய ஃபின்டெக் மையம் அமைவது, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பொருளாதார மாநிலமாக மாற்ற உறுதியான அடித்தளத்தை அமைக்கும்.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu