Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CUET UG Date: க்யூட் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; புதிய தேதி எப்போது? ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

CUET UG Date: க்யூட் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; புதிய தேதி எப்போது? ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

ABP Nadu 4 months ago

நாடு முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை காரணமாக 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய தேதிகளை க்யூட் இணையதளத்தில் விரிவாக காணலாம். புதிய அட்டவணையின்படி, மே 31, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

அதென்ன க்யூட் தேர்வு

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மே 31ஆம் தேதி நடைபெறும் க்யூட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு நகரங்கள்

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், அருகிலுள்ள வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தேர்வு நகரங்களையும் தேர்வு செய்துகொள்ள முடியும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், குறிப்பிடப்பட்ட திருத்தக் காலத்தின்போது திருத்தப்பட்ட/ கூடுதல் நகரத் தேர்வு விருப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வு தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NEET Re Exam: கடும் வெப்ப அலை: ஜூனில் நீட் மறுதேர்வு- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

  • மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
  • அதில் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, லாகின் செய்யலாம்.
  • தொடர்ந்து ஹால் டிக்கெட் பக்கம் தோன்றும்.
  • அதை வருங்கால தேவைகளுக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.

தொலைபேசி எண்: 011- 40759000

இ மெயில்: ugcnet@nta.ac.in

Author : க.சே.ரமணி பிரபா தேவி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu