Dailyhunt
Dindigul: 'திமுகவினருக்கு வெட்கம் இல்லையா?' - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

Dindigul: 'திமுகவினருக்கு வெட்கம் இல்லையா?' - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

ABP Nadu 3 weeks ago

டப்பாடி பெத்த பிள்ளைக்கு நீங்கள் எப்படி பெயர் வைக்கலாம். திமுக அமைச்சர்களை பார்த்து கேள்வி எழுப்பிய திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது.

திண்டுக்கல் சட்டமன்ற வேட்பாளராக மீண்டும் அதிமுக சார்பாக திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். தொடர்ந்து வாக்காளர்களை சந்தித்து வரும் சீனிவாசன் இன்று பேகம்பூர் முகமதியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் திமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில் திண்டுக்கல்லில் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். திண்டுக்கல்லுக்கு நாங்கள் என்ன செய்யவில்லை. பட்டியலிட முடியாது. அந்த அளவிற்கு செய்துள்ளோம். திண்டுக்கல்லில் நான் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது எடப்பாடி ஆட்சியில். அதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். முகமதியாபுரம் பேகம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சமஸ்தானுக்கு நிதி வழங்கியுள்ளோம்.

இதே போல் தொடர்ந்து திண்டுக்கல் சட்டமன்ற பகுதி முழுவதும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி அமைச்சர் சக்கரபாணி இருவரும் தங்கள் தான் திட்டத்தை கொண்டு வந்தது போல் மருத்துவக் கல்லூரியை திறந்தனர்.

எடப்பாடி பெத்த புள்ளைக்கு நீங்கள் பெயர் வைக்க அசிங்கமாக இல்லை. வெட்கம் சூடு, சொரணை இல்லையா? கேள்வி கேட்கும் செந்தில்குமார் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் 10 வருடத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அதை தெரிந்து கொண்டு பேச வேண்டும் எனக்கூறி பிரச்சாரம் செய்தார்.

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu