Dailyhunt
DMK: தவெக பெயரை சொல்லக்கூட தயங்கும் திமுக.. இதுதான் அரசியல் நாகரீகமா? - விளாசும் நெட்டிசன்கள்!

DMK: தவெக பெயரை சொல்லக்கூட தயங்கும் திமுக.. இதுதான் அரசியல் நாகரீகமா? - விளாசும் நெட்டிசன்கள்!

ABP Nadu 1 week ago

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூட சொல்லாமல் திமுக தவிர்ப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாபெரும் வெற்றி பெற்ற தவெக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 59 இடங்களிலும், அதன் கூட்டணி 14 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அரசியலில் முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 34 சதவிகித வாக்குகள் வாங்கி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே மக்கள் ஆட்சி அதிகாரம் செய்யும் பொறுப்பை வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வயது வித்தியாசமில்லாமல் கொண்டிருக்கும் விஜயை திமுக, அதிமுக ஆகிய பிரதான திராவிட கட்சிகள் சரியாக கணிக்க தவறியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக இந்த தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்றிருக்கிறது. அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மே 7ம் தேதி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவாவது தவெக பெயரை சொல்லாவிட்டாலும், விஜய் பெயரை குறிப்பிட்டு தேர்தல் பரப்புரையில் விமர்சனங்களை முன்வைத்தது. ஆனால் திமுக அதைக்கூட செய்யவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொன்ன முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது என தவெகவை குறிப்பிட்டுள்ளார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் பெயரை சொல்லாமல் தவிர்த்துள்ளார்.

அரசியல் நாகரீகம் இதுவல்ல

வெற்றி, தோல்வி என்பது அனைத்து விஷயங்களிலும் நடப்பது தான். அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் திமுகவிடம் இருந்து இப்படியான நடவடிக்கை என்பது எதிர்பாராத ஒன்றாக உள்ளது என பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். கள நிலவரத்தை ஏற்றுக்கொண்டு அரசியலில் சரியாக செயல்பட்டால் நிச்சயம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள் எனவும், இல்லாவிட்டால் இருக்கும் வெறுப்பு இன்னும் அதிகமாக இதுபோன்ற ஒரு சிறிய சம்பவமும் அடிப்படை காரணமாக அமைந்து விடும் என தெரிவித்துள்ளனர்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu