Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Donald Trump: ''Strait of Trump''-ஆ.?! உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா.? இப்படி பண்றீங்களே ட்ரம்ப் சார்.?!

Donald Trump: ''Strait of Trump''-ஆ.?! உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா.? இப்படி பண்றீங்களே ட்ரம்ப் சார்.?!

ABP Nadu 5 months ago

அமெரிக்கா - ஈரான் போரின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது தெரிந்த விஷயம் தான். ஆனால், அதற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா.?

ஆம், ட்ரம்ப் தான் அதற்கு பெயரை மாற்றியுள்ளார். அவரது சமூக வலைதள பக்கத்தில் அதற்கான வரைபடத்தை அவர் பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்ப்போம்.

உலகளாவிய பேசுபொருளான ஹார்முஸ் ஜலசந்தி

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தன. அதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஈரான், உடனடியாக பதிலடியை தொடங்கியது. அதாவது, கூட்டுப்படைகளுக்கு தளங்களை கொடுத்து உதவிவரும் வளைகுடா நாடுகள், அதாவது அரபு நாடுகள் மீது கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியத ஈரான்.

இது போதாது என்று, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் கடல் நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. பின்னர், அவ்வழியாக நட்பு நாடுகளின் எண்ணெய் கப்பல்களை மட்டும் செல்ல அனுமதித்தது. ஹார்முஸை கடக்க இனி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கும் வந்தது ஈரான்.

இதனிடையே, கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்த பழி ட்ரம்ப் மீது விழுந்தது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை எப்படியாவது திறக்க வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயன்றார் ட்ரம்ப். நேட்டோ நாடுகளிடம் அவர் உதவி கேட்ட நிலையில் அவர்கள் அதனை மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் ஈரான் முற்றிலும் அழிக்கப்படும என எச்சரித்து கெடுவும் விதித்திருந்தார். ஆனால், மீண்டும் மீண்டும் அந்த கெடுவை ஒத்தி வைத்தார். இதனால், ஹார்முஸ் ஜலசந்தி உலக அளவில் பெரும் பேசுபொருளானது.

தோல்வியடைந்த பேச்சுவார்தை - ஹார்முஸ் முற்றுகையை அறிவித்த ட்ரம்ப்

இதனிடையே, பாகிஸ்தான், எகிப்து, துருக்கிய நாடுகள் இணைந்து, அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தன. அதற்காக 2 வார கால போர்நிறுத்தத்தையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுவதாக ஈரான் அறிவித்தது.

இதனால் உலக நாடுகள் நிம்மதியடைந்திருந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை தாங்களும் முற்றுகையிடுவதாக அறிவித்தார். அதன்படி, ஈரானுக்கு உள்ளேயும், வெள்யேயும் செல்லும் கப்பல்கள் அனைத்தும் முடக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்து, அது தற்போது அமலில் உள்ளது. இதனால், ஈரான் ஹார்முஸை திறந்தும் எந்த பலனும் இல்லாமல் போனது.

“Strait of Trump'' - வரைபடத்தை பகிர்ந்த ட்ரம்ப்

இப்படிப்பட்ட சூழலில், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை பல மாதங்களுக்கு தொடரக்கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்திக்கு 'டிரம்ப் ஜலசந்தி' என பெயர் மாற்றி, திருத்தப்பட்ட வரைபடம் ஒன்றை நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் எந்த தலைப்பும் இல்லாமல் அந்த படத்தை பதிவிட்டார். இந்தப் படம் முதலில் 'IStandWithTrump47' என்ற கணக்கினால் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu