Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..

ABP Nadu 1 week ago

தினந்தோறும் உயரும் தங்கம் விலை

ங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய திருமணங்கள், தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளதால் எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்த நிலையில், இந்த வாரம் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தினமும் சவரனுக்கு 1200 முதல் 2400 ரூபாய் வரை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 4,800 ரூபாய் உயர்ந்துள்ளது.

உயரும் தங்கம் விலை நிலவரம்

  • ஜூன் 30ம் தேதி காலையில் கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,04,240 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில் கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூன் 1-ம் தேதி தங்கத்தின் விலையானது காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 1,06,000 ரூபாய்க்கு விற்பனையானது.
  • ஜூலை 2ஆம் தேதி காலையில் தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை.
  • மாலையில் மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. கிராமிற்கு மீண்டும் 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்நந்து, ஒரு சவரன் 1,08,400 ரூபாய்க்கும் விற்பனை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து 1,09,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu