சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், மாலையில் மீண்டும் 1,200 ரூபாய் அதிகரித்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதேபோல், வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 5,000 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.
தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை 34 ஆயிரம் என்ற உயரத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அதே நேரம் தங்கம் விலை உயர்ந்தாலும் தங்கத்தை வாங்குவதை மக்கள் குறைத்துக்கொள்வதில்லை.
இதற்கு முக்கிய காரணமாக இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதே காரணமாகும். எனவே தங்கம் விலை பல ஆயிரங்கள் குறைந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
ஏறி இறங்கும் தங்கம் விலை
- ஜூன் 29-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை.
- ஜூன் 30ம் தேதி காலையில் கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,04,240 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில் கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும் விற்பனை.
- ஜூன் 1-ம் தேதி தங்கத்தின் விலையானது காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 1,06,000 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நேற்று காலையில் குறைந்தும், மாலையில் அதிகரித்தும் நகைப்பிரியர்களை ஷாக் கொடுத்தது. இந்த நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலையானது அதிகரித்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி, கிராமிற்கு மீண்டும் 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்நந்து, ஒரு சவரன் 1,08,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
இதேபோல், வெள்ளி விலையானது இன்று காலையில் கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் கிராமிற்கு மீண்டும் 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மொத்தத்தில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400 ரூபாயும், வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாயும் உயர்ந்து, மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

