Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?

Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?

ABP Nadu 3 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சில நாட்களாக அதிரடியாக குறைந்து வரும் நிலையில், இன்றும் கணிசமாக குறைந்துள்ளது.

தங்கம் சவரனுக்கு 560 ரூபாயும், வெள்ளியின் விலை கிலோவிற்கு 5000 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக முதலீட்டாளர்களின் பார்வை கச்சா எண்ணெய் மீது திரும்பியது. இதனால் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்தால் தங்கத்தின் மீதான விலையானது குறைந்தது. இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் தங்கத்தின் விலையானது உயர தொடங்கியது. ஆனால், தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • ஜூலை 2-ம் தேதி காலையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில் மீண்டும் விலை உயர்ந்து கிராமிற்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்தது 1,08,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூலை 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து 1,09,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தங்கம் விலையில் மாற்றமில்லை.
  • ஜூலை 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து 1,08,480 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 7-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,07,200 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து, 13,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கத்தைப் போல், வெள்ளி விலையும் ஏறி இறங்கி வரும் நிலையில், நேற்று விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. ஆனால், இன்று கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்று 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu