Dailyhunt
GT vs RCB: 342 நாட்களுக்குப் பிறகு நேர்ந்த சோகம்! குஜராத் பந்துவீச்சில் நிலைகுலைந்த ஆர்சிபி..புள்ளிப்பட்டியலில் முன்னேறிய GT

GT vs RCB: 342 நாட்களுக்குப் பிறகு நேர்ந்த சோகம்! குஜராத் பந்துவீச்சில் நிலைகுலைந்த ஆர்சிபி..புள்ளிப்பட்டியலில் முன்னேறிய GT

ABP Nadu 1 week ago

குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் சொதப்பிய ஆர்சிபி, பந்துவீச்சிலும் குஜராத்தின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல் அவுட் ஆனது

சொதப்பிய பேட்டிங்:

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தாலும், அவர்களால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. அதிரடி மன்னன் டிம் டேவிட் இந்த முறை ரசிகர்களை ஏமாற்றினார்.

ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தத்தளித்தது. இறுதியில் ரோமாரியோ ஷெப்பர்ட், வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்ததால், பெங்களூரு 150 ரன்களை கடந்தது. கடைசி 4 விக்கெட்டுகளுக்கு அந்த அணி 59 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 155 ரன்களுக்கு பெங்களூரு 'ஆல்-அவுட்' ஆனது.

நீண்ட நாள் கழித்து

கடந்த 342 நாட்களில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஆல்-அவுட் ஆவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2025 மே 23 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

ருத்ரதாண்டவம்' ஆடிய ஷுப்மன் கில்

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு, கேப்டன் ஷுப்மன் கில் அதிரடி தொடக்கம் தந்தார். வெறும் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்தார். ஷுப்மன் கில் கொடுத்த கடினமான கேட்ச்சை விராட் கோலி அபாரமாகப் பிடித்து அவரை வெளியேற்றினார். 3வது வீரராக வந்த ஜோஸ் பட்லர் 19 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் 'இம்பாக்ட் பிளேயராக' களம் புகுந்த ராகுல் தெவாட்டியா, 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்

பாயிண்ட்ஸ் டேபிள்:

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.தோல்வியுற்ற போதிலும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலேயே நீடிக்கிறது. 25 பந்துகள் மீதமிருக்கையிலேயே குஜராத் இலக்கை எட்டியது, அந்த அணியின் 'நெட் ரன் ரேட்டை' (Net Run Rate) கணிசமாக உயர்த்தியுள்ளது.

Author : ஜேம்ஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu