Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இனி சுகமான பயணம்!" - LHB பெட்டிகளுடன் பாமணி விரைவு ரயில் சேவை இன்று முதல் துவக்கம்

"இனி சுகமான பயணம்!" - LHB பெட்டிகளுடன் பாமணி விரைவு ரயில் சேவை இன்று முதல் துவக்கம்

ABP Nadu 3 weeks ago

ஞ்சாவூர்: கோரிக்கை நிறைவேறிடுச்சு என்று மன்னார்குடி மக்கள் மகிழ்ச்சியில் உற்சாக துள்ளல் போடுகின்றனர்.

என்ன தெரியுங்களா? மன்னார்குடி – திருப்பதி இடையே இயக்கப்படும் பாமணி விரைவு ரயில் இன்று (30ம் தேதி) முதல் நவீன எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் இயக்குவதுதான்.

மன்னார்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாமணி விரைவு ரயில் (வண்டி எண் 17408) இயக்கப் படுகிறது. இந்த ரயில் மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமை என வாரத்திற்கு மூன்று நாட்கள் அதிகாலை 5. 10க்கு புறப்பட்டு மதியம் 3. 35 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் (வண்டி எண் : 17407) திருப்பதியில் இருந்து காலை 11. 55 மணிக்கு புறப்பட்டு இரவு 10 . 15 க்கு மன்னார்குடி வந்தடை கிறது. மறு மார்க்கத்தில் நடைபெறும் இந்த ரயில் சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமை என மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது.

பழைய ஐசிஎப் வகை பெட்டிகளை கொண்டு இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பயணத்தின் போது பெட்டிகள் அதிகள வில் குலுங்கும். இதனால், பயணிகளுக்கு குறிப்பாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல அசெளரியங்கள் ஏற்பட்டு வந்தது.

எனவே, மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமணி விரைவு ரயிலில் பழைய பெட்டிகளை நீக்கி விட்டு எல்.ஹெச் .பி என்னும் நவீன ரயில் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மன்னார்குடி - திருப்பதி இடையே இயங்கும் பாமணி விரைவு ரயில் (வ. எண் 17407 - 17408) இன்று முதல் (ஏப்ரல் 30) நவீன வகை எல். ஹெச் .பி பெட்டிகள் கொண்டு இயக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இதன் மூலம், பாமணி விரைவு ரயிலில் 3 அடுக்கு ஏ.சி பெட்டிகள் 3 , இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கள் 3, இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் 6, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 9, மாற்றுத் திறநாளி பெட்டி 1 மற்றும் 1 லக்கேஜ் பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் கொண்டு இயக்கப்பட இருக்கிறது. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மன்னார்குடி பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் சார்பில் கூறுகையில், திருப்பதி செல்லும் பாமணி விரைவு ரயில் எல்.ஹெச் .பி ரயில் பெட்டிகளை கொண்டு இயக்கப்பட உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் கடலூர் மாவட்ட பக்தர்கள் இந்த ரயில் சேவையை நம்பி தான் திருப்பதி சென்று வருகிறார்கள்.

திருப்பதியில் தரிசனத்திற்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆன்லைன் முன்பதிவில் குறித்த நேரத்தில் தரிசன அனுமதி சீட்டு கிடைப்பதில்லை.தரிசனம் அனுமதி சீட்டு கிடைப்பதற்கு நேரத்திற்கு ஏற்றவாறு பயணம் திட்டமிடல் செய்யும் போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இந்த ரயில் சேவை கிடைப்பதால் சுவாமி தரிசனம் செய்ய இயலாத சூழல் ஏற்படுகி றது. தினசரி ரயிலாக இயக்கப்படாததால் சுவாமி தரிசன சீட்டு கிடைத்தும் ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் பயணத்தை கைவிடும் நிலை உள்ளது. எனவே, மன்னார்குடி - திருப்பதி பாமணி விரைவு ரயிலை தற்போது வாரத்திற்கு மூன்று முறை சேவை என் பதை மாற்றி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu