Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
iPhone 18 Pro Max: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் வெளியீட்டு தேதி - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி? புதுசா ஒரு சிப்?

iPhone 18 Pro Max: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் வெளியீட்டு தேதி - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி? புதுசா ஒரு சிப்?

ABP Nadu 2 weeks ago

IPhone 18 Pro Max: இந்தியாவில் வரும் செப்டம்பர் 9ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்..

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்த கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இதற்கான தங்களது சிறப்பு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்பதையும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் அடுத்த தலைமுறை ஐபோன் ப்ரோ மாடல்கள் முக்கிய பங்காற்ற உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை "சர்ப்ரைஸ் & ஷைன்" என்ற வாக்கியம் மூலம் டீஸ் செய்துள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் ஆகியவை முக்கிய அறிவிப்புகளில் இடம்பெறக்கூடும் என கூறப்படுகிறது.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் புதிய மாற்றங்கள் என்ன?

கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், 2026 ஐபோன் வெளியீடு ஒரு மாறுபட்ட உத்தியைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் ஐபோன் 18 ப்ரோ மாடல்களை செப்டம்பரில் வெளியிடத் தயாராகி வருவதாகவும், அதே நேரத்தில் சாதாரண ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e ஆகியவை 2027ம் ஆண்டில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் பெரிய அளவிலான வெளிப்புற வடிவமைப்பு மாற்றம் எதுவும் இருக்காதாம். மாறாக, ஆப்பிள் நிறுவனம் கேமரா அமைப்பு, செயலாக்கத் திறன், பேட்டரி ஆயுள் மற்றும் இணைப்பு வசதிகள் ஆகியவற்றை அப்க்ரேட் செய்வதில் கவனம் செலுத்தியுள்ளதாம். இதில் உள்ள மிகப்பெரிய மாற்றம், மாறுபடும் துளை கொண்ட பிரதான கேமராவின் அறிமுகமாக இருக்கலாம். இது ப்ரோ மேக்ஸுக்கு மட்டுமே பிரத்யேகமானதாக இருக்கக்கூடும்.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் - எதிர்பார்ப்புகள்

வெளியாகியுள்ள தகவல்களின்படி, முன்பதிவுகள் செப்டம்பர் 12 அன்று தொடங்கலாம் என்றும், சில்லறை விற்பனைக்கு செப்டம்பர் 18 வாக்கில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்கள்ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் எதிர்பார்ப்புகள்
டிஸ்பிளே6.9 இன்ச் OLED, 120Hz
ப்ராசஸர்A20 Pro, 2nm தொழில்நுட்பம் அடிப்படையிலானது என தகவல்
ரியர் கேமராக்கள்ட்ரிபிள் 48MP சிஸ்டம், பலதரப்பட்ட அபெர்ட்சர் என தகவல்
முன்புற கேமராக்கள்48MP சிஸ்டம் என தகவல்
பேட்டரிஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் இருப்பதை விட மிகப்பெரியதாக இருக்குமாம்
RAM12GB என தகவல்
ஸ்டோரேஜ்256GB, 512GB, 1TB, 2TB(வாய்ப்பு என தகவல்)
வண்ணங்கள்டார்க் செர்ரி மற்றும் பிற லைட்டர், டார்கர் வண்ண விருப்பங்கள் என தகவல்

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் - புது சிப் பயன்பாடு

போன் 18 ப்ரோ மேக்ஸ், ஆப்பிளின் அடுத்த தலைமுறை A20 ப்ரோ சிப்பைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆப்பிள் தனது உயர்தர சிப்பை 2nm உற்பத்தி முறைக்கு மாற்றுவதாகக் கூறப்படுவதால், இந்தப் செயலி புதிய ஐபோன் தலைமுறையிலிருந்து எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான மேம்பாடுகளில் ஒன்றாகும். இதன் வாயிலாக செயல்திறன் மற்றும் மின்சாரச் சேமிப்பு ஆகிய இரண்டிலும் மேம்பாடுகளைக் கொண்டுவரக்கூடும். தற்போதைய அறிக்கைகளின்படி, A19 தலைமுறையுடன் ஒப்பிடுகையில், A20 குடும்பம் சுமார் 15 சதவிகித செயல்திறன் மேம்பாட்டையும், அதே நேரத்தில் மின்சாரச் சேமிப்பில் ஏறத்தாழ 30 சதவிகித முன்னேற்றத்தையும் வழங்கக்கூடும்.

Diesel Automatic Cars: மைலேஜோடு ஓட்டவும் ஈசியா இருக்கனுமா? ரூ.15 லட்சத்தில் டீசல் ஆட்டோமேடிக் கார்கள் - 4 சாய்ஸ்

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் - எதிர்பார்க்கப்படும் விலை

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256ஜிபி மாடலை ரூ.1,49,900 விலையில் அறிமுகப்படுத்தியது. இது 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி சேமிப்புத் திறன் ஆப்ஷன்களில் கிடைத்தது. எனவே அப்க்ரேட்கள் அடிப்படையில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் விலையில் சாத்தியமான உயர்வு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு துறைசார் வல்லுநர்களின் கணிப்பின்ப்டி, ப்ரோ மேக்ஸின் இந்திய விலை சுமார் ரூ.1,59,900 ஆக இருக்கலாம். அதிகரித்து வரும் மெமரி மற்றும் உதிரிபாகங்களின் விலைகள், எதிர்பார்க்கப்படும் இந்த விலை உயர்வுக்கு ஒரு சாத்தியமான காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu