Dailyhunt
iPhone 20: ஆப்பிள்-னாலே Advanced தான்; முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரவிருக்கும் ஐபோன் 20; எப்போ லாஞ்ச்.?

iPhone 20: ஆப்பிள்-னாலே Advanced தான்; முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரவிருக்கும் ஐபோன் 20; எப்போ லாஞ்ச்.?

ABP Nadu 1 week ago

டுத்த ஆண்டு, ஐபோன், 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், நிறுவனம் ஐபோன் 19 தொடரை தவிர்த்துவிட்டு, நேரடியாக ஐபோன் 20 வரிசையை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது, ​​ஐபோன் 20-ஐ சிறப்பானதாக மாற்றுவதற்கான தயாரிப்பு வேலைகளை ஆப்பிள் தொடங்கியுள்ளதாக சமீபத்திய கசிவு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஐபோன் முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரும். இது மிகவும் மெல்லிய பெசல்கள் மற்றும் வளைவான வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த ஐபோன் முழு டிஸ்ப்ளே முன்பக்கத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்திய கசிவு, அதன் ஓரங்களில் மிகவும் மெல்லிய பெசல்கள் இருக்கலாம் என்று வெளிப்படுத்தியுள்ளது.

ஐபோன் 20-க்காக ஆப்பிள் என்ன செய்து வருகிறது.?

தகவல் வழங்குநர் ஷ்ர்டிங்கரின் கூற்றுப்படி, ஐபோன் 20-ல் 1.1 மிமீ பெசல்கள் இடம்பெறக்கூடும். இது நான்கு வளைவுகள் கொண்ட வட்டமான வடிவமைப்பில் அறிமுகமாகலாம். இதனால், அதன் ஃபிரேம், டிஸ்ப்ளேயின் நீட்டிக்கப்பட்ட பகுதியாகத் தோன்றும். மேலும், இந்த ஐபோனுக்காக ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தைச் சோதித்து வருவதாகவும், ஆனால் அதன் படத் தரத்தில் திருப்தி அடையவில்லை என்றும் அந்த தகவல் வழங்குநர் தனது பதிவில் கூறுகிறார்.

இதன் விளைவாக, ஐபோன் 20-ல் முன்பக்க கேமராவிற்காக ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட் அல்லது மிகச் சிறிய டைனமிக் ஐலேண்ட் இடம்பெறக்கூடும். அந்த தகவல் வழங்குநர், சாம்சங்கின் போலார் ஐடியையும் எதிர்பார்க்கிறார். இருப்பினும், இந்த இரண்டு அம்சங்களும் இதுவரை நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஐபோன் 20-ல் ஹேப்டிக் பட்டன்கள் இடம்பெறலாம்

ஐபோன் 20 சீரிஸ், டிஸ்ப்ளேவில் மட்டும் தனித்துவமாக இருக்கப்போவதில்லை. இந்த மாடல் வரிசையில், பவர், வால்யூம், ஆக்சன் மற்றும் கேமரா கட்டுப்பாடுகளுக்கான Physical பொத்தான்களுக்கு பதிலாக, திட நிலை பொத்தான்கள் (solid-state buttons) இடம்பெறும். இந்த பொத்தான்கள் உண்மையில் அசையாது, ஆனால், அதை தொடும்போது, தொட்டுணரக்கூடிய அதிர்வுகள் மூலம் ஒரு பின்னூட்டத்தை வழங்கும். இதன் மூலம், ஒரு பொத்தானை அழுத்துவது போன்ற உணர்வை பயனருக்கு அளிக்கும்.

செப்டம்பரில் ஐபோன் 18 ப்ரோ மாடல்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்திய கசிவுகளின்படி, இந்த இரண்டு மாடல்களிலும் பழைய ஐபோன்களை விட சிறிய டைனமிக் ஐலேண்ட் இடம்பெறும்.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் டைனமிக் ஐலேண்ட் அகலம் 20.76 மிமீ ஆகும். இது, வரவிருக்கும் மாடலில் 13.49 மிமீ ஆகக் குறைக்கப்படும். இதை அடைவதற்காக, ஃபேஸ்ஐடியின் சில பகுதிகள் டிஸ்ப்ளேவுக்குக் கீழே மாற்றப்படுகின்றன. இந்த மாடல்களுடன் ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனையும் அறிமுகப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu