Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?

IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?

ABP Nadu 1 week ago

IPL 2026 Final RCB Vs GT: ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

2வது IPL பட்டத்தை வெல்லப்போவது யார்?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அதன் இறுதிநாளை எட்டியுள்ளது. அதன்படி இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியுள்ளன. கடந்த 19 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு இது ஐந்தாவது இறுதிப்போட்டியாகும். அதேநேரம், கடந்த ஐந்து ஆண்டுகளாக மட்டுமே விளையாடி வரும் குஜராத் அணிக்கு இது மூன்றாவது இறுதிப்போட்டியாகும். ஆனாலும், இரு அணிகளும் இதுவரை தலா ஒருமுறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதனால், இன்றைய போட்டியில் வென்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

RCB Vs GT பலப்பரீட்சை

பெங்களூரு மற்றும் குஜராத் அணி மோத உள்ள இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளே, ப்ளே-ஆஃப் சுற்றின் முடிவில் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?

ஐபிஎல் வரலாற்றில் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை மற்றும் சென்னை அணிகள் மட்டுமே, அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அதன்படி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 2019ம் ஆண்டிலும், 2020ம் ஆண்டிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக தோனி தலைமையிலான சென்னை அணி 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. 2022ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற அணி, 2023ம் ஆண்டிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் வெற்றி வாய்ப்பை பாற்கொடுத்தது. இந்நிலையில் தான் கடந்த 2025ம் ஆண்டு ரஜத் படிதார் தலைமயிலான பெங்களூரு அணி தனது முதல் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் தோனி மற்றும் ரோகித்தின் சாதனையை ரஜத் படிதார் ஈடுசெய்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

RCB Vs GT - நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பெங்களூரு அணி 5 முறையும், குஜராத் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு பந்தாடியது. குறிப்பாக கேப்டன் ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக

அகமதாபாத் மைதானம் எப்படி?

அகமதாபாத் மைதானம் வழக்கம்போல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சேஸ் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடைசியாக நடைபெற்ற 6 ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் நான்கில் சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இன்று டாஸ் வெல்லும் அணியும் சேஸ் செய்யவே அதிக வாய்ப்புள்ளது. போட்டியின் போது மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RCB Vs GT -உத்தேச ப்ளேயிங் லெவன்

பெங்களூரு: விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர்/பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா (வி.கே.), ரொமாரியோ ஷெப்பர்ட், சலீம் குமார், புவனேஷ்வர், புவனேஷ்வர், ஜேக்கப் டஃபி/சுயாஷ் சர்மா

குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ஜேசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ்

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu