Dailyhunt
கல்லூரியில் கருப்பு பட ஆடியோ லாஞ்ச்...கல்விநிலையத்தில் சினிமா பிரச்சாரமா!  சூர்யாவின் அன்பான ரசிகர்கள் கேளுங்க

கல்லூரியில் கருப்பு பட ஆடியோ லாஞ்ச்...கல்விநிலையத்தில் சினிமா பிரச்சாரமா! சூர்யாவின் அன்பான ரசிகர்கள் கேளுங்க

ABP Nadu 2 weeks ago

சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை சோலைமலை கல்லூரியில் நடக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைச் சூழலில் கல்வி நிலையரங்களில் திரைப்பட ப்ரோமோஷன்கள் நடத்துவது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா மீது விமர்சனங்களை திருப்பியுள்ளது.

கல்லூரியில் கருப்பு பட ஆடியோ லாஞ்ச்

ப்ரிண்ட் மீடியா தவிர்த்து சினிமாத் துறை சமூக வலைதளங்களை பெரியளவில் தங்களது திரைப்படங்களின் ப்ரோமோஷன்களுக்காக சார்ந்திருக்கிறது. அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இல்லாத ஒரு படத்தை பார்ப்பது அறிதாகிவிட்டது. அதே போல் எல்லா படங்களின் ப்ரோமோஷன்களையும் இப்போது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் திரைப்பட நிகழ்ச்சிகளை முடிந்த அளவிற்கு மாணவர்கள் மத்தியில் நடத்தி அந்த படத்தை நடிகர்கள் ப்ரோமோ செய்கிறார்கள். கல்வி நிலையங்களில் திரைப்படம் ப்ரோமோஷன்கள் செய்வதை சமூக அக்கறையுள்ள சிலர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்கள். தனது படங்களை படிக்கும் மாணவர்களிடம் ப்ரோமோட் செய்ய மாட்டேன் என நடிகர் சசிகுமார் வெளிப்படையாக நிலைப்பாடு எடுத்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கல்லூரியில் நடந்ததும் விமர்சனத்திற்குள்ளாது . அதனைத் தொடர்ந்து அடுத்து சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீடு கல்லூரியில் நடக்கவிருக்கிறது. கல்வி தொடர்பான பல முன்னெடுப்புகளை எடுத்துள்ள சூர்யா இது குறித்து படக்குழுவிடம் பேசியிருப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu