Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kara Movie Review : தனுஷின் கர திரைப்படம் எப்படி இருக்கு...முழு விமர்சனம் இதோ

Kara Movie Review : தனுஷின் கர திரைப்படம் எப்படி இருக்கு...முழு விமர்சனம் இதோ

ABP Nadu 1 month ago

1990 களில் அமெரிக்கா ஈராக் இடையிலான போர் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்பு , கடன் என்கிற பெயரில் விவசாயிகளை சுரண்டு வங்கிகள் , தந்தையின் நீலத்தை மீட்க போராடும் நாயகன் என மூன்று அடுக்குகளில் கர படத்தின் கதையை இணைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

சுவாரஸ்யமான களம் என்றாலும் ஒரே இடத்தைச் சுற்றி சுற்றி கதை நகர்வதால் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது.

கர கதை

உள்ளூர் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்கச் சென்று மாட்டிக்கொள்கிறார் நாயகன் தனுஷ். ரிடையர்மெண்ட் நெருங்குவதால் பெரிய கேஸ் பிடித்து ஊடக கவனம் பெற நிலைக்கும் காவல் அதிகாரி சூராஜ் தனுஷ் மீது பல்வேறு பொய் குற்றங்களை சுமத்த பார்க்கிறார். தப்பித்து ஓடும் தனுஷ் ஆந்திராவில் தனது மனைவி மமிதாவுடன் ஹோட்டலில் வேலைப்பார்க்கிறார். சொந்தமாக் ஹோட்டல் திறக்க திட்டமிட்டு தந்தை கே.எஸ் ரவிகுமாரிடம் நிலத்தை விற்று பணத்தை வாங்கி வர செல்கிறா தனுஷ். வங்கியில் கடன் வாங்கி வட்டி கட்டாததால் அந்த நிலத்தை ஜப்தி செய்கிறார்கள். தனது தந்தை மற்றும் ஊர்காரர்களின் நிலத்தை மீட்க தனுஷ் என்ன முடிவெடுக்கிறார் என்பதே கர படத்தின் கதை.

1990 களில் அமெரிக்கா ஈராக் இடையிலான போர் இராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. மறுபக்கம் அப்பாவி விவசாயிகளை கடன் வாங்க வைத்து அவர்கள் நிலத்தை ஜப்தி செய்கிறது வங்கி. இந்த களத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியாக சுவாரஸ்யமான ஒரு த்ரில்லர் திரைப்பட அனுபவத்தை கர திரைப்படம் வழங்குகிறது. முதல் பாதியில் வங்கியை கொள்ளையடிக்கும் ஒட்டுமொத்த சீக்வன்ஸ் படத்தில் மாஸ்டர் டச் . முதல் பாதி பெரும்பாலும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமுள்ளன. நாயகன் எடுக்கப்போகும் அதிரடியான முடிவுகளுக்கு இந்த செண்டிமெண்ட் காட்சிகள் அடித்தளம் அமைக்கின்றன.

அதே நேரம் விறுவிறுப்பாக தொடங்கினாலும் இரண்டாம் பாதியில் கதை பெரும்பாலும் ஒரே இடத்தை சுற்றியே நகர்வதால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற சஸ்பென்ஸ் குறைந்துவிடுகிறது. முதல் பாதியில் கொடுத்த எதிர்பார்ப்பை க்ளைமேக்ஸ் திருபதிபடுத்த மிஸ் செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

கரசாமியாக வரும் தனுஷ் எப்போதும் போல் நடிப்பால் ஒட்டுமொத்த கதையையும் தாங்கியிருக்கிறார். மமிதா பைஜூ மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் படத்தில் அவருக்கு தனுஷூடன் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளன. கதையில் அவருக்கு பெரிதாக பங்கு இல்லாதது ஏமாற்றமே. அப்பாவாக வரும் கேஎஸ். ரவிகுமார் தனது வழக்கமான ஸ்டைலில் இல்லாமல் புதிய விதமாக கதாபாத்திரத்தை காட்டியிருக்கிறார். சூராஜ் வெஞ்சமூடுவின் நடிப்பி சிறப்பு. அவரது கதாபாத்திரம் ஒற்றை பரினாமத்தில் மட்டுமே அமைந்திருந்தது வருத்தம். வங்கி மேலாளராக வரும் ஜெயராம் நகைச்சுவை , வில்லத்தனம் என சரிவர வழங்கியிருக்கிறார். கருணாஸ் சில காட்சிகளில் எண்டர்டெயின் செய்கிறார்.

கதை , வெவ்வேறு திரிகளை கொண்டு கதையில் இணைத்த விதம் , ராமநாதபுரம் மாவட்டத்தின் நிலப்பரப்பை காட்டிய விதம் , டிராமா என பல்வேறு பாசிட்டிவ்களை கொண்டிருக்கிறது. பாடல்கள் முதல் பாதியிலேயே அடுத்தடுத்து இடம்பெற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கிறது.

இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் போர் தொழில் படம் த்ரில்லர் படமாக மிக கச்சிதமாக கணக்கிட்டு எழுதப்பட்ட ஒரு திரைக்கதையாக இருந்தது. ஆனால் கர திரைப்படத்தில் உணர்ச்சிகளே கதையை நகர்த்து அம்சங்களாக இருக்கின்றன. இரண்டையும் சம அளவில் கையாள்வதில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருந்தாலும் ஒரு நல்ல கமர்சியல் அனுபவமாக மாற்றியிருக்கிறார் விக்னேஷ் ராஜா

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu