Kara Dhanush Movie Review: போர் தொழில் எனும் வெற்றிப் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கர திரைப்படம் உருவாகியுள்ளது.
தனுஷின் தோல்விக் கரையை நீக்கியதா "கர"
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, கோடை விடுமுறையும் தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் தமிழ் திரையுலகின் பெரிய நட்சத்திரங்கள் பலரும் தங்களது படங்களை அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் போர் தொழில் எனும் வெற்றிப் படத்தை இயக்கிய, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "கர" திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கர திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ஆன்லைனில் பதிவிட்டு வரும் விமர்சனங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
"கர" திரைப்பட விமர்சனம்:
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. அதைதொடர்ந்து வெளியான இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெய்ன் போன்ற படங்களும் தோல்வியையே சந்தித்தன. இந்நிலையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள கர திரைப்படம் தனுஷுன் தொடர் தோல்வி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு, "படத்தின் தொடக்கம் நன்றாக இருக்கிறது, இடையில் இட்லி கடை படத்தை போன்ற எண்ணத்தை தருகிறது, இடைவேளை காட்சி சிறப்பாக உள்ளது" என நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
"கர" திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்
Author : குலசே

