Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Karthigai Deepam: கும்பாபிஷேகத்தை தடுக்க சதி... சந்திரகலாவைத் தடுப்பாரா கார்த்திக்?

Karthigai Deepam: கும்பாபிஷேகத்தை தடுக்க சதி... சந்திரகலாவைத் தடுப்பாரா கார்த்திக்?

ABP Nadu 1 day ago

மிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி தன்னை அடிக்க ஆட்களை தயார் செய்து கார்த்திகை பரிசோதனை செய்ய முயற்சி செய்ய அது தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கும்பாபிஷேகத்தை நிறுத்த சதி:

சிவணான்டி, சந்திரகலா மற்றும் முத்துவேல் ஆகியோர் கூட்டு சேர்ந்து கோவில் கும்பாபிஷேகத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என திட்டமிடுகின்றனர். மறுபக்கம் ரேவதி மற்றும் ரோகிணி பேசிக்கொண்டிருக்கும் போது ரோகிணி கார்த்திக் உன்னை காதலிக்கிறார் தானே என கலாய்க்கிறாள்.

அடுத்ததாக முத்துவேல் இரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து அம்மனின் கண்ணில் சிவப்பு மையை தடவி வைத்துவிட்டு வருகிறான். அடுத்த நாள் காலையில் கோவிலில் அம்மன் கண்ணில் இருந்து ரத்தம் வழிவது போல மை வழிந்திருக்க அதை பார்த்து ஊர்காரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கிளம்ப சொன்ன ஜோதிடர்:

காசி நதியிலிருந்து ராஜா சேதுபதி திடீரென்று எழுந்து கொள்ள அங்கிருந்த ஜோதிடர் ஒருவர் நீங்க ஊருக்கு கிளம்புங்க.. போயிட்டு கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிங்க என்று அனுப்பி வைக்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Author : சுகுமாறன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu