Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kolathur Election Result:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி - அதிர்ச்சியில் திமுகவினர்

Kolathur Election Result: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி - அதிர்ச்சியில் திமுகவினர்

ABP Nadu 3 weeks ago

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த நாளான இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி தொடங்கியது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் பிறகு, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இதில், கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். 72,321 வாக்குகள் பெற்ற அவர், 9,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 80,838 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்வியால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu