Dailyhunt
கோவை தெற்குக்கு தனி வாக்குறுதி... ஹிண்ட் கொடுத்த செந்தில் பாலாஜி...

கோவை தெற்குக்கு தனி வாக்குறுதி... ஹிண்ட் கொடுத்த செந்தில் பாலாஜி...

ABP Nadu 1 week ago

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோட்டைமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற அவர் பள்ளிவாசல் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

ரோஜா மலர்களுடன் குழந்தைகள் வரவேற்பு

தொடர்ந்து அந்தப் பகுதியில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக ஆதரவாளர்கள் சிலர் அவர் மீது மலர் தூவி வரவேற்றனர். ஓரிரு சிறுவர்களும் குழந்தைகளும் ரோஜா மலர்களை கொடுத்து வரவேற்றனர் .மேலும் இந்த நிகழ்வில் சமாதான புறாக்களையும் பறக்கச் செய்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, தனக்கு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறார் முதல் அமைச்சர். 11 வார்டுகளை உள்ளடக்கிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

கோவை 10 சட்டமன்ற தொகுதிகளில் தெற்கு தொகுதி வளர்ச்சியில் சிறந்த கவனம் செலுத்தி தொகுதியின் வளர்ச்சிக்காக நிச்சயமாக பாடுபடுவேன் என்ற உறுதியை வாக்காளர்கள் மத்தியில் வழங்குவதாக தெரிவித்தார். மக்களின் ஆதரவுடுனும் உற்சாகத்துடனும் இந்த தேர்தல் பணிகளை துவக்கி இருப்பதாகவும் இந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

கோவை தொகுதி வேட்பாளராக நியமித்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, தலைவர் என்ன கூறுகிறாரோ அந்த கட்டளையை நிறைவேற்றுவது எங்களுடைய பொறுப்பு என்றும் நாடாளுமன்ற தேர்தலில் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார். அதேபோன்று இந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் 10 சட்டமன்ற தொகுதியில் மூன்று தொகுதிகளுக்கு தோழமை கட்சிகளுக்காக கொடுத்துள்ளார். மீதமுள்ள ஏழு தொகுதிகளில் திமுக சார்பில் நேரடியாக நாங்கள் போட்டியிடுகிறோம் எனவும் எனவே யார் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது தலைவர் தான் என தெரிவித்தார்.

இந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன செய்யப் போகிறோம் என்ற தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் அந்த தேர்தல் அறிக்கையை மக்களிடத்தில் எடுத்துச் சென்று திமுக அரசு அமைந்த உடன் அதனை முழுமையாக நிறைவேற்றக்கூடிய பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு பல்வேறு இளைஞர்கள் வரவேற்பு வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல் தேர்தலை அவர்கள் சந்திக்கிறார்கள் தேர்தல் முடிந்த பிறகு எவ்வளவு வாக்கு வாங்குகிறார்கள் என்று பார்ப்போம், எங்களைப் பொறுத்தவரை எத்தனை இயக்கங்கள் போட்டியிடுகிறது அவை புதியதா அல்லது பழையதா என்றெல்லாம் பார்ப்பதில்லை அதிக வாக்குகள் வெற்றி பெற வேண்டியது தான் எங்களுடைய கடமையாக கருதுகிறோம். கோவை மாவட்டத்தை பொருத்தவரையிலும் சரி தமிழகத்தை பொறுத்தவரையிலும் சரி திமுக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். கோவை தொகுதியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Author : பிரகாஷ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu