Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
லாஸ்ட் சான்ஸ். நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு

லாஸ்ட் சான்ஸ். நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு

ABP Nadu 1 week ago

நீட்தேர்வுகட்டணத்தைதிரும்பப்பெறவங்கிவிவரங்களைச்சமர்ப்பிப்பதற்கானகாலக்கெடுநீட்டிக்கப்பட்டு உள்ளதாகதேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்குத் தேவையான வங்கி விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு மே 27ஆம் தேதியாக இருந்தது. இந்தத் தேதி ஜூன் 22ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடந்த நிலையில், அதில் முறைகேடு ஏற்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

எனினும் மாணவர்கள் ஏற்கெனவே செலுத்தி இருந்த கட்டணம் திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களின் சரியான வங்கி கணக்கு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஏராளமான மாணவர்கள் இன்னும் தங்களது வங்கி விவரங்களை முழுமையாகப் பதிவு செய்யாமல் இருப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், எவருக்கும் நிதி இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இந்தச் சமர்ப்பிப்பிற்கான கடைசித் தேதியை நீட்டித்து NTA அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • கட்டணத்தைத் திரும்பப் பெற விரும்பும் மாணவர்கள், உடனடியாக நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு தங்களது விண்ணப்ப எண் மற்றும் ரகசியக் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
  • அதன்பின்னர், கட்டணம் திரும்பப் பெறுவதற்கான இணைப்பில் மாணவர் அல்லது அவரது பெற்றோரின் வங்கி கணக்கு எண், வங்கி கிளையின் பெயர் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீடு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • விவரங்களைப் பிழையின்றி மிகவும் கவனமாகப் பதிவு செய்வது கட்டாயம்.

தவறான வங்கி விவரங்களை அளித்தால் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட இந்த இறுதி கால அவகாசத்திற்குள் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதன் பிறகு எவ்விதக் கோரிக்கைகளும் கட்டாயம் ஏற்கப்பட மாட்டாது.

எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் உடனடியாகத் தங்களது தகவல்களைப் புதுப்பிக்குமாறு கல்வி ஆலோசகர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ உதவி மைய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

Author : க.சே.ரமணி பிரபா தேவி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu