Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
LPG Booking Rules: நினைத்த நேரத்தில்  இனி சிலிண்டர் கிடைக்காது! நாளை முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்... முழு விவரம்

LPG Booking Rules: நினைத்த நேரத்தில் இனி சிலிண்டர் கிடைக்காது! நாளை முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்... முழு விவரம்

ABP Nadu 1 month ago

நாளை மே1 முதல் சிலிண்டர் விநியோகத்தில் அதிரடி மாற்றங்கள் வரப்போகின்றன. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளன.

சிலிண்டர் பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய முன்பதிவு காலக்கெடு

இனி நினைத்த நேரத்தில் எல்லாம் சிலிண்டர் புக் செய்ய முடியாது. நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டருக்கு 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் இது 21 நாளாக இருந்தது. இதுவே ஊரகப் பகுதிகளில் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிவதற்குள் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அந்த கோரிக்கை நிராகரிக்கப்படும்.

OTP இல்லையென்றால் சிலிண்டர் கிடையாது

மே 1 முதல் 'டெலிவரி ஆதென்டிகேஷன் கோட்' எனப்படும் டி.ஏ.சி முறை கட்டாயமாக்கப்படுகிறது. இனி பழையபடி ரசீது அல்லது புளூ புக்கை காட்டினால் மட்டும் சிலிண்டர் கிடைக்காது. சிலிண்டர் முன்பதிவு செய்ததும் உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும். அதை டெலிவரி செய்பவரிடம் சொன்னால் மட்டுமே சிலிண்டர் ஒப்படைக்கப்படும். முறைகேடுகளைத் தவிர்க்க ஏற்கனவே 94.5 சதவீத விநியோகங்கள் இந்த முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

விலை உயர்வு அபாயம்

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 60 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், மே 1 முதல் மீண்டும் ஒரு விலை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாய E-KYC

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறுபவர்கள் பயோமெட்ரிக் முறையிலான ஆதார் சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த நடைமுறையை முடிக்காதவர்கள் உடனடியாக E-KYC செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விநியோக நிலைமை

இந்தியாவின் தினசரி தேவை 80,000 டன்னாக இருக்கும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி 46,000 டன்னாக மட்டுமே உள்ளது. தட்டுப்பாட்டைப் போக்க அமெரிக்காவிலிருந்து கூடுதல் எரிவாயு இறக்குமதி செய்யப்பட உள்ளது. எனவே, நுகர்வோர் தங்களின் செல்போன் எண்ணை சிலிண்டர் கணக்குடன் இணைப்பதோடு, அடுத்த புக்கிங் தேதியை 'மை எல்பிஜி' இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Author : ஜேம்ஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu