Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Maruti Fronx: 35KM மைலேஜ் ஹைப்ரிட் கார் எப்ப தான் வருது..! இழுத்தடிக்கும் மாருதி? விலை, அம்சங்கள், வசதிகள் என்ன?

Maruti Fronx: 35KM மைலேஜ் ஹைப்ரிட் கார் எப்ப தான் வருது..! இழுத்தடிக்கும் மாருதி? விலை, அம்சங்கள், வசதிகள் என்ன?

ABP Nadu 4 months ago

Maruti Suzuki Fronx Facelift: மாருதி ஃப்ராங்க்ஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில், ADAS உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

மாருதி சுசூகி ஃப்ராங்கஸ் ஃபேஸ்லிஃப்ட்:

மாருதி சுசூகியின் ஃப்ராங்க்ஸ் கார் மாடலானது, மிகப்பெரிய அளவிலான முதல் மிட்-லைஃப் அப்டேட்டை பெற உள்ளது. சப் - காம்பேக்ட் க்ராஸ் ஓவர் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனுக்கான வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 2027ம் ஆண்டு வாக்கில் இந்த கார் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த மேம்படுத்தப்பட்ட எடிஷனானது தீவிரமாக சாலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அடிக்கடி பொதுவெளியில் அடையாளம் காணப்படுகிறது. அதன் வாயிலாக காரின் பல்வேறு அம்சங்களை அறிய முடிகிறது.

ஃப்ராங்கஸ் ஃபேஸ்லிஃப்ட் - ADAS உள்ளிட்ட அம்சங்கள்

சாலை சோதனையின் போது எடுக்கப்பட புகைப்படங்கள் மூலமாக ADAS அம்சத்தின் திருத்தத்திற்கான உபகரணமும், பின்புற பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட LIDAR (ஒளியைக் கண்டறிந்து வரம்பிடல்) யூனிட்டும் பொருத்தப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை மேம்படுத்துவதற்காக ஃப்ராங்க்ஸில் ADAS தொகுப்பு இணைக்கப்படுவதை உறுதி செய்ய முடிகிறது. இதன்படி, காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆடோமேடிக் எமர்ஜென்சி ப்ரேகிங், லேன் கீப் அசிஸ்ட், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஹை பீம் அசிஸ்ட் போன்ற மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் காரில் இடம்பெற உள்ளன. விலைக்கு நிகரான காரின் மதிப்பை கூட்டுவதற்காக, அப்க்ரேட் செய்யப்பட்ட ஃப்ராங்க்ஸில் சன்ரூஃப், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், இருக்கைகளுக்கு புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் புதிய ட்ரிம்கள் ஆகியவற்றை மாருதி சுசூகி வழங்கக் கூடும். தற்போதைய எடிஷனில் உள்ள பல அம்சங்கள் அப்படியே புதிய மாடலிலும் தொடரக்கூடும். இந்த பட்டியலில் ஹெட்-அப் டிஸ்பிளே, க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ரியர் ஏசி வெண்ட்கள், சுசூகி கனெக்டட் கார் அம்சங்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல அம்சங்கள் அடங்கும்.

ஃப்ராங்க்ஸின் ஹைப்ரிட் எடிஷன் தயார்..!

மற்றொரு முக்கிய அப்டேட்டாக, மாருதி சுசூகி நிறுவனம் தனது வெகுஜன சந்தை வாகனங்களுக்காக, உள்நாட்டிலேயே உருவாக்கிய ஒரு வலிமையான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. HEV என்ற கோட்நேமை கொண்ட இந்த சீரிஸ் ஹைப்ரிட் பவர்டிரெய்ன், தற்போது மாருதி க்ராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோவில் பயன்படுத்தப்படும் டொயோட்டா அட்கின்சன் வலிமையான ஹைப்ரிட் அமைப்பை விட கணிசமாக அதிக செலவு குறைந்ததாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் மைலேஜ்

வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானதாக இருந்தால், இந்த காம்பாக்ட் கிராஸ்-ஓவர் நாட்டிலேயே மிகவும் அதிகம் மைலேஜ் தரும் காராக இருக்கும். தற்போதுள்ள 1.0L டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் மற்றும் 1.2L, நான்கு சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் அப்படியே தொடரக்கூடுமாம். புதிய வலிமையான ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் டாப் வேரியண்ட்களுக்கு ஒதுக்கப்படலாம். அதேசமயம் குறைந்த மற்றும் நடுத்தர ரக மாடல்களுக்கு தற்போதுள்ள பெட்ரோல் இன்ஜின்கள் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படும்.

Cheapest SUV: நாட்டின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி, 19KM மைலேஜ், 4 ஸ்டார் ரேட்டிங் ரூ.6000 போதும் - முழு விவரம்

ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் விலை

புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சற்றே மாற்றியமைக்கப்பட்ட க்ரில், மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள், மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் போன்ற குறைந்தபட்ச டிசைன் மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. மாருதி சுசூகி, மேம்படுத்தப்பட்ட ஃப்ராங்க்ஸ் வரிசையுடன் புதிய வெளிப்புற வண்ணங்கள் மற்றும் கேபின் தீம் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தக்கூடும். இதன் விலை 7 லட்சத்தில் தொடங்கி 12 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும். குறிப்பாக ஹைப்ரிட் வேரியண்டின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu