Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாதம் ₹27,000+ சம்பளத்தில் அரசு வேலை! செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே!

மாதம் ₹27,000+ சம்பளத்தில் அரசு வேலை! செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே!

ABP Nadu 4 months ago

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிட விபரங்கள் மற்றும் ஊதியம்

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு:

1.பாதுகாப்பு அலுவலர் (நிறுவனஞ்சாரா பராமரிப்பு - Institutional Care): காலிப்பணியிடம்: 1 மாதத் தொகுப்பூதியம்: ரூ. 27,804/-

2. SJPU சமூகப் பணியாளர் (Social Worker): செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 'Special Juvenile Police Unit' (SJPU)-க்கு பணியாற்ற இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலிப்பணியிடம்: 2. மாதத் தொகுப்பூதியம்: ரூ. 18,536/-.

3. சமூகப் பணியாளர் (Social Worker): காலிப்பணியிடம்:b1, மாதத் தொகுப்பூதியம்: ரூ. 18,536/-

கல்வித் தகுதி மற்றும் முன்அனுபவம்

பாதுகாப்பு அலுவலர் (நிறுவனஞ்சாரா பராமரிப்பு): விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி (Social Work), சமூகவியல் (Sociology), குழந்தை மேம்பாடு (Child Development), மனித உரிமைகள் (Human Rights), பொது நிர்வாகம் (Public Administration), உளவியல் (Psychology), மனநல மருத்துவம் (Psychiatry), சட்டம் (Law), பொது சுகாதாரம் (Public Health) அல்லது சமூக வள மேலாண்மை (Community Resource Management) ஆகியவற்றில் முதுகலை பட்டம் (Post Graduate Degree) பெற்றிருக்க வேண்டும்.

அல்லது மேற்கூறிய ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Graduate Degree) பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அல்லது சமூக நலத்துறையில் திட்ட உருவாக்கம், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் போன்றவற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் கணினி இயக்கத்தில் சிறந்த திறன் (Proficiency in Computers) பெற்றிருப்பது அவசியமாகும்.

SJPU மற்றும் பொது சமூகப் பணியாளர்கள்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி (B.A in Social Work), சமூகவியல் (Sociology) அல்லது சமூக அறிவியல் (Social Sciences) போன்ற இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய துறைகளில் முன்அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை (Weightage) வழங்கப்படும். மேலும், கணினி இயக்கத்தில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 42 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது முழுமையான விவரங்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வருகிற 20.07.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chengalpattu.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்: FO-06, தரைத்தளம், F- Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு - 603 111. தொடர்பு எண்கள்: 6382613173 & 9789422159.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu