மதுரை மாநகராட்சியின் அம்ரூத் குடிநீர்த் திட்ட பிரதான குழாயில் திருவேடகம் தொடக்கக் கூட்டுறவு அலுவலகம் அருகே உடைந்து குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வராது உங்க ஏரியா இருக்கா?
மதுரை மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் வைகை வடகரை மற்றும் தென்கரை ஆகிய பகுதிகளில் உள்ள விடுபட்ட வார்டு பகுதிகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் அம்ரூத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஊதா நிற குழாய் வழியாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்ரூத் குடிநீர்த் திட்ட பிரதான குழாயில் திருவேடகம் தொடக்கக் கூட்டுறவு அலுவலகம் அருகே உடைந்து குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வது ஊழியர்களுக்கு சவாலான விடயமாக இருந்து வருகிறது. இதை சரிசெய்யும் பணி இன்று (செப்டம்பர் 1) நடக்கிறது. இதையொட்டி இன்றும், நாளையும் (செப்டம்பர் 2) குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அந்த வார்டுகள் விவரம்:
வார்டு எண் 1,
வார்டு எண் 2,
வார்டு எண் 3,
வார்டு எண் 4,
வார்டு எண் 5,
வார்டு எண் 6,
வார்டு எண் 8,
வார்டு எண் 9,
வார்டு எண் 11,
வார்டு எண் 13,
வார்டு எண் 15,
வார்டு எண் 16,
வார்டு எண் 17,
வார்டு எண் 18,
வார்டு எண் 19,
வார்டு எண் 20,
வார்டு எண் 23,
வார்டு எண் 24,
வார்டு எண் 25,
வார்டு எண் 26,
வார்டு எண் 27,
வார்டு எண் 28,
வார்டு எண் 29,
வார்டு எண் 30,
வார்டு எண் 31,
வார்டு எண் 32,
வார்டு எண் 33,
வார்டு எண் 34,
வார்டு எண் 35,
வார்டு எண் 37,
வார்டு எண் 38,
வார்டு எண் 39,
வார்டு எண் 41,
வார்டு எண் 42,
வார்டு எண் 43,
வார்டு எண் 48,
வார்டு எண் 71,
வார்டு எண் 72,
வார்டு எண் 73,
வார்டு எண் 74,
வார்டு எண் 75,
வார்டு எண் 78,
வார்டு எண் 79,
வார்டு எண் 80 முதல் 100 வார்டுகள் வரை.
இவ்வார்டு மக்கள் குடிநீரை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.
Author : அருண் சின்னதுரை

