Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!

Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!

ABP Nadu 3 weeks ago

மிழ்நாடு அமைச்சரவையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வான கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. 2024ம் ஆண்டு கட்சி தொடங்கி 27 மாதங்களில் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம் பற்றி தான் இந்திய அரசியல் களம் முழுவதும் பேசுபொருளாக உள்ளது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்படி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன், ராஜ்மோகன், டி.கே.பிரபு, வெங்கட ரமணன், கீர்த்தனா ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

சிவகாசி எம்.எல்.ஏ., கீர்த்தனா

விருதை மகள் என்ற பெயரோடு விருதுநகர் மாவட்ட மக்களுக்கு நன்கு அறிமுகமானார் கீர்த்தனா. அவருக்கு விஜய் சிவகாசியில் தொகுதியில் சீட் கொடுத்தார். சிவகாசி தொகுதியின் 69 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ என்ற சிறப்பை கீர்த்தனா பெற்றிருக்கிறார். சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை வீழ்த்திய கீர்த்தனா, முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 3ம் இடத்துக்கு தள்ளினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏ., என்ற சிறப்பும் கீர்த்தனாவுக்கு கிடைத்துள்ளது. இப்போது அவருக்கு தொழில்துறை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு மட்டும் கிடைக்கப்போகும் விடிவுக்காலம்

கீர்த்தனாவின் சிவகாசி தொகுதி என்பது இந்தியாவின் குட்டி ஜப்பான் என அழைப்படும் பகுதியாகும். தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் தொழில் வளம் மிக்க ஒரு நகரமாகும்.

பட்டாசுத் தொழிலுக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மற்றும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு என ஏகப்பட்ட பிரச்னைகள் சிவகாசி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் அங்கு பிரச்னையாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பட்டாசு விபத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் உயிரிழக்கின்றனர். அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தடுப்பு உள்ளிட்ட விஷயங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. ஆனால் திமுக, அதிமுக எந்த கட்சிகளும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை.

கீர்த்தனா கொடுத்த வாக்குறுதிகள்

இந்த நிலையில் அந்த தொகுதியில் களம் கண்ட தவெக கீர்த்தனா, சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடக்கிய ஒரு வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் பட்டாசுத் தொழிலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான தொழிலாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது அவர் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளது இதனால் இந்த முறையாவது சிவகாசி தொகுதி மக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu