அரசுப்பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்ததில் எந்த தவறும் இல்லை என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சையான அமைச்சர் கீர்த்தனா ஆய்வு
தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனா தனது சொந்த தொகுதியான சிவகாசியின் திருத்தங்கலில் செயல்படும் அரசுப்பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவி ஒருவரிடம் அவர் ஆங்கிலத்தில் உரையாட முற்பட்ட விஷயம் சர்ச்சையாக மாறியது. அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் விழிக்க, மாணவி முகத்தை காட்டி வீடியோ வெளியான விவகாரம் கடும் கண்டனங்களைப் பெற்றது. மாணவிக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
ஆனால் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்த கீர்த்தனா, அரசுப்பள்ளிகள் மோசமான உட்கட்டமைப்புடன் இருப்பதாக புகைப்படங்களுடன் பதிலடி கொடுத்தார். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள் என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள் என பதிலடி கொடுத்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலடி
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வுப்பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆய்வுப்பணி என்பது காலம், காலமாக நடைபெறுவது தான். அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதியில் இருக்கும் இடங்களுக்கு செல்வது என்பது மரபு தான். நான் அமைச்சர் கீர்த்தனாவிடம் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்தேன். ஆனால் அந்த வீடியோவை அவர் எடுக்கவில்லை என தெரிவித்தார். கீர்த்தனாவே ஒரு மாற்றுத்திறனாளியின் மகளாக பிறந்து, தமிழ் வழி கல்வி பயின்றவர். இன்று ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடிய அளவில் தனித்திறமை வளர்த்துக் கொண்ட அரசியல் ஆளுமை தான். மற்ற ஊடகங்கள் எடுத்த வீடியோ தான் சர்ச்சையாக மாறியுள்ளது. இத்தகைய ஆய்வு என்பது மரபு தான். அதனை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்தார்.
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “எந்தவொரு பள்ளிகளிலும் மாணவர்களின் அவர்கள் பேசக்கூடிய தமிழ் மொழி பற்றியோ, ஆங்கிலப்புலமையோ, குடும்ப பின்னணி பற்றி அரசியல் காரணங்களுக்காக கேட்கக்கூடாது. ஆனால் இந்த நிகழ்வில் அமைச்சர் கீர்த்தனா, ஒரு எளிய வீட்டுப்பெண் என்பதால் அந்த மாணவியுடன் நெருங்கி பழக நினைத்து அக்கா ஸ்தானத்தில் இருந்து பேசியுள்ளார். அதனை தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

