Dailyhunt
MK Stalin: "காவி நிறத்திற்கு மாறிய ஈபிஎஸ்.. ஊர் ஊராக சென்று புலம்புகிறார்.. "வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்

MK Stalin: "காவி நிறத்திற்கு மாறிய ஈபிஎஸ்.. ஊர் ஊராக சென்று புலம்புகிறார்.. "வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்

ABP Nadu 1 week ago

நான் லிஸ்ட் போட்டு சொல்வதுபோல பழனிசாமியிடம் லிஸ்ட் இருக்கிறதா? அதனால்தான் ஊர் ஊராக சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் எதுவும் செய்யமாட்டார். நாம் செய்வதையும் சகித்துக்கொள்ளமாட்டார் என முதல்வர் ஸ்டாலின் காட்டாமாக விமர்சித்து இருந்தார்.

திருவண்ணாமலையும் திமுகவின் கோட்டையும்

திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. என்னையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. அந்த உரிமையோடு ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். கள்ளக்குறிச்சியும், திருவண்ணாமலையும் திராவிட மாடல் 2.Oக்கு ரெடியா.” என பேசினார்.

திட்டங்கள் மற்றும் பழனிசாமி மீதான விமர்சனம்

இரண்டு மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். நான் லிஸ்ட் போட்டு சொல்வதுபோல பழனிசாமியிடம் லிஸ்ட் இருக்கிறதா? அதனால்தான் ஊர் ஊராக சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.,அவர் எதுவும் செய்யமாட்டார், நாம் செய்வதையும் சகித்துக்கொள்ளமாட்டார் என்றார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமை தடுத்து நிறுத்த வழக்கு தொடர்ந்தார். 10 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம். இனிமேல் ஆண்டுதோறும் இந்த முகாம் நடத்தப்படும். அதேபோல் நூறுநாள் வேலைத்திட்டத்திலும் மக்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. அத்திட்டத்தின் பெயரை பாஜக மாற்றியது. வேலைக்கான சம்பளம் வரவில்லை. புதிதாகவும் வேலை தரவில்லை ஏன்று கூறியிருந்தார்.

வேளாண் திட்டங்கள் மற்றும் போராட்டங்கள்

இதுதொடர்பாக திமுகவும், கூட்டணி கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் பழனிசாமி 200 நாட்கள் வேலை என உருட்டினார். அவர் இவ்வாறு முட்டுக் கொடுப்பதை பார்த்து நாடாளுமன்றமே ஆடிப்போய் விட்டது. இதேபோலத்தான் பாஜகவே வாபஸ்பெற்ற மூன்று வேளாண் திட்டங்களுக்கு முரட்டு முட்டுக்கொடுத்தார். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைகூட தடுத்தோம். இரண்டு மாதங்களில் திருத்தம் நடைபெறக்கூடாது என போராடினோம். முடிந்தவரை மக்களின் வாக்குரிமையை காப்பாற்றினோம். இந்த விவகாரத்திலும் முட்டாள்தனமாக பேசினார் பழனிசாமி என்றார்.

காவி நிறத்திற்கு மாறிய ஈபிஎஸ்

ஏதாவது ஒரு விஷயத்திலாவது அவர் டெல்லி பக்கம் நிக்காமல், தமிழ்நாடு பக்கம் நின்றுள்ளாரா? தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பாஜக செய்யும் ஒரு செயலையாவது கண்டித்துள்ளீர்களா? உலகத்திற்கே பொதுவான திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினர். அதை எதிர்த்து பேசவில்லை. இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் பூசணிக்காய் அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

ஆனால் தமிழுக்கு பட்டாணி அளவுக்கூட இல்லை. கீழடியறிக்கையை ஏன் வெளியிடவில்லை என பாஜகவை பலமுறை கேட்கிறோம். ஆனால் பழனிசாமி இதுகுறித்து பேசமாட்டார். 2024 தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேவந்துவிட்டோம் எனக் கூறினார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை எனக்கூறினார். ஆனால் இப்போது என்ன ஆனது? பச்சோந்தியைவிட வேகமாக காவி நிறத்திற்கு மாறினார்.

அதிகாரிகள் மாற்றம்- முதல்வர் விமர்சனம்

பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படித்தான் அதிகாரிகளை மாற்றுகிறார்களா?. சேலம் ஆட்சியர் போன்ற முக்கிய அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள் என்றால் இது யாருக்கு உதவ நடக்கிறது என மக்களுக்கு சந்தேகம் வராதா?. பீகாரில் தேர்தலின்போது இப்படித்தான் அதிகாரிகளை மாற்றினீர்களா?. பழனிசாமி போட்டியிடும் தொகுதியில், தான் நினைத்ததை செய்ய வேண்டும் என இது நடக்கிறதா? எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் திரும்ப திராவிட மாடல் அரசுதான் ஆட்சியைப் பிடிக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.

Author : ஜேம்ஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu