Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அரசியலில் பெரிய திருப்பம்!.. நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி !..

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அரசியலில் பெரிய திருப்பம்!.. நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி !..

ABP Nadu 2 weeks ago

மிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்-2026 தமிழக வெற்றிக்கழத்தினர் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் 85,206 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக சார்பில் போட்டியிட்ட எஸ். பிரகாஷ் 78,401 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட வி.டி. நாராயணசாமி 41,286 வாக்குகள் பெற்றுள்ளார். வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்ட அவர் செய்தியாளரிடம் பேசும் போது உதயசூரியனுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

50 ஆண்டுகால அதிமுக அரசியல் வாழ்க்கையில் இருந்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் , தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் நான்காவது முறையாக களம் கண்ட ஓ பன்னீர்செல்வம்,

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் முதல் சுற்றில் தவெக வேட்பாளர் பிரகாஷ் - ஐ விட 49 ஓட்டு பின் தங்கினார். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் அடிப்படையில் சற்று முன்னேறி வந்த ஓ பன்னீர்செல்வம், பத்தாவது சுற்றில் தவெக வேட்பாளர் பிரகாஷை விட 660 வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்தார். பின்னர் அடுத்த பதினோராவது சுற்றில் மீண்டும் முன்னிலைக்கு சென்ற அவர் 25 வது இறுதிச்சுற்று வரை முன்னிலையிலேயே இருந்து தபால் வாக்குகளையும் சேர்த்து 85,206 வாக்குகள் பெற்று, 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் பிரகாஷ் 78,401 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 41,286 வாக்குகளும், நாதக வேட்பாளர் கலையரசன் 11,455 வாக்குகள் பெற்றனர். இதை அடுத்து கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்த ஓ பன்னீர்செல்வம், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி சான்றிதழை பெற்றார். பின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் தனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu