இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்று வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, கடந்த சில வருடங்களாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மின்சார இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர்.
PURE EV Etryst 350:
அந்த வரிசையில் முக்கியமான நிறுவனமாக வளர்ந்து வரும் நிறுவனம் PURE EV. இவர்கள் ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் வடிவத்திலும் இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர். இவர்களின் முக்கியமான படைப்பாக இருப்பது PURE EV Etryst 350. இந்த மின்சார பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
ஒரே சார்ஜில் 171 கிலோமீட்டர்:
இந்த பைக்கின் ஒரே வேரியண்ட் Etryst 350 X. இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். அதிகபட்சமாக 94 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 120 கிலோ ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது.
விலை என்ன?
இதில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 545 ஆகும். இந்த பைக் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் பொருத்தப்பட்ட பேட்டரி நிரந்தரமானது ஆகும். இந்த பேட்டரி லித்தியம் அயன் பேட்டரி ஆகும்.
ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ஹைட்ராலிக் டூயல் சஸ்பென்சன், பின்பக்கம் ஹைட்ராலிக் டூயல் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி இதில் உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. கீலெஸ் லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. எல்இடி முகப்புவிளக்குகள் உள்ளது. ப்ரேக், டெயில் விளக்குகள் வசதி உள்ளது. பில்லியன் சீட் வசதி உள்ளது 7 இன்ச் எல்எஃப்டி டிஸ்ப்ளே வசதி உள்ளது.
Author : சுகுமாறன்

