Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?

ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?

ABP Nadu 1 week ago

ந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கார், ஸ்கூட்டர் மற்றும் பைக் என அனைத்து வாகனங்களிலும் மின்சார வாகனங்களின் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

இந்த சூழலில், மிதிவண்டி எனப்படும் சைக்கிள்களிலும் மின்சார வேரியண்ட் ஆதிக்கம் தொடங்கியுள்ளது.

Firefox Urban Eco:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டும் வாகனமாக மிதிவண்டி உள்ளது. இ ஸ்கூட்டர்களில் இருப்பது போல சார்ஜ் செய்து கொண்டு ஓட்டும் வகையில் இந்த இ சைக்கிள்கள் சந்தையில் அறிமுகமாகி வருகிறது.

அந்த வகையில், இந்திய சந்தையில் Firefox Urban Eco இ சைக்கிள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

மைலேஜ்:

இந்த இ சைக்கிளின் விலை ரூபாய் 93 ஆயிரத்து 035. இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதில் 10 ஏஎச் பேட்டரி ஆற்றல் உள்ளது. இதனால், இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை செல்லலாம். ஒரு இ ஸ்கூட்டர் அளிக்கும் மைலேஜ் அளவிற்கு இந்த இ சைக்கிள் அளிக்கிறது. இந்த இ சைக்கிள் 19 கிலோ எடை கொண்டது.

சிறப்புகள்:

இதில் உள்ள சக்கரங்கள் ட்யூப் சக்கரங்கள் ஆகும். 32 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஹப் மோட்டார் உள்ளது. இதில் 7 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதை வீட்டிலே சார்ஜ் செய்து கொள்ளலாம். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் இதை ஓட்டிச்செல்வது எளிதாகும்.

90 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வரை இந்த இ சைக்கிளை எடுத்துச் செல்லலாம். மேலும், மிகவும் குறுகலான நெருக்கடியான இடங்களில் ஓட்டிச்செல்வதற்கும் இந்த இ சைக்கிள் மிகவும் சுலபமாக இருக்கும். இதில் ஒரே ஒரு வேரியண்டும், ஒரு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு வருகிறது.

Author : சுகுமாறன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu