Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

ABP Nadu 4 months ago

உலக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மட்டுமல்ல விளம்பர உலகிலும் தனது மார்க்கெட் மதிப்பை மீண்டும் நிரூபித்துள்ளார் . ஹாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ படமான Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடிகர் டாம் ஹாலந்துடன் இணைந்து நடித்ததற்காக , இந்திய மதிப்பில் சுமார் ரூ .143 கோடி (15 மில்லியன் அமெரிக்க டாலர் ) சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது .

வெறும் 40 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த புரமோஷன் வீடியோவில், ஸ்பைடர்மேனை தேடி செல்லும் மெஸ்ஸி, பின்னர் அவருடன் நியூயார்க் நகரில் சாகச பயணம் மேற்கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சோனி பிக்சர்ஸ் வெளியிட்ட இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று இணையத்தில் வைரலாகியது.

சம்பளத்தில் சினிமா பிரபலங்களை மிஞ்சிய மெஸ்ஸி

மெஸ்ஸி வாங்கியதாக கூறப்படும் இந்த ரூ.143 கோடி சம்பளம் தற்போது சினிமா உலகிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் ஒரு முழு திரைப்படத்திற்கு பெறும் சம்பளத்தை விட, மெஸ்ஸி ஒரு விளம்பரத்திற்காகவே பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்த தொகை, உலக அளவில் விளையாட்டு வீரர்களின் வணிக மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

மெஸ்ஸி ஏற்கனவே அடிடாஸ், பெப்சி உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் பிராண்ட் தூதுவராக இருந்து வருகிறார். மைதானத்தில் அவர் படைக்கும் சாதனைகள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள ரசிகர் பட்டாளமும் அவரை விளம்பர நிறுவனங்களின் முதல் தேர்வாக மாற்றியுள்ளது. அதனால் அவர் இடம்பெறும் ஒவ்வொரு விளம்பரமும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.

இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் 2026 FIFA உலகக் கோப்பை தொடரிலும் மெஸ்ஸி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 39 வயதிலும் அர்ஜென்டினா அணியின் முக்கிய வீரராக களமிறங்கி விளையாடி வரும் அவர், அணியை மீண்டும் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மைதானத்தில் அவரது ஒவ்வொரு ஆட்டமும் கவனத்தை ஈர்க்கும் நிலையில், திரையுலகிலும் அவர் உருவாக்கியுள்ள இந்த புதிய சாதனை, விளையாட்டு வீரர்களின் உலகளாவிய வணிக சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu