Dailyhunt
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!

Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!

ABP Nadu 3 weeks ago

30 நாட்களில் நடவடிக்கை

வீடு , மனை வாங்குவோர் , அதற்கான பத்திரப் பதிவு முடிந்து தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கின்றனர்.

இ - சேவை மையங்கள் வாயிலாக தாக்கலாகும் இதற்கான மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் இயல்பான பட்டா பெயர் மாற்றம், 15 நாட்களிலும், உட்பிரிவு உருவாக்க வேண்டி இருந்தால் , 30 நாட்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும் தாலுகா அலுவலக அதிகாரிகள் , இந்த பணிகளை முறையாக செய்வதில்லை. இருப்பினும், பல இடங்களில் பட்டா மாறுதல் செய்யும் போது அதில் அளவுகளை தவறாக குறிப்பிடுவது , உரிமையாளர் பெயரில் பிழைகள் ஏற்படுத்துவது என பல்வேறு தவறுகள் நடக்கின்றன.

தவறுகளை சரி செய்ய , மக்கள் தாலுகா அலுவலகங்களில் மேல் முறையீடு செய்யலாம். இது மட்டுமல்லாது ஒரு நபருக்கு வழங்கப்பட்ட பட்டா தவறானது என தெரிய வரும் நிலையில் வெளியாட்கள் அதை ரத்து செய்ய மேல்முறையீடு செய்வர். இது போன்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீது தாசில்தார்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் கூறப்படுகிறது.

இது குறித்து நில நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

பட்டா தொடர்பான மேல்முறையீடுகளை தாசில்தார்கள் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர்கள் விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை பணிகளை, 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் இந்த கால அவகாசம் குறித்து, பொது மக்களுக்கு தாசில்தார்கள் தெரிவிப்பது இல்லை. இதனால் மக்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பட்டா மேல்முறையீடுகளை 30 நாட்களில் முடிக்க தாசில்தார்கள் , மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

Author : சேர்மசாமி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu