Dailyhunt
Premalatha Vijayakanth: திமுக கூட்டணியில் தேமுதிக.. ரொம்ப ஃபீல் பண்றேன்.. பிரேமலதா உருக்கம்!

Premalatha Vijayakanth: திமுக கூட்டணியில் தேமுதிக.. ரொம்ப ஃபீல் பண்றேன்.. பிரேமலதா உருக்கம்!

ABP Nadu 1 week ago

திமுகவுடன் ஏன் இவ்வளவு நாள் கூட்டணி அமைக்கவில்லை என தான் ஃபீல் பண்ணியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சி.வி.கணேசன் உடனிருந்தார்.

கருணாநிதி - விஜயகாந்த் உறவு

தொடர்ந்து விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா, “கலைஞர் கருணாநிதி மீது கேப்டன் விஜயகாந்துக்கு அவ்வளவு பாசம் இருந்தது. இவர் விஜி விஜி என அழைக்க, அவர் அண்ணன் அண்ணன்” என்பார். நான் பக்கத்தில் உட்கார்ந்து பாத்திருக்கிறேன். நாங்க எல்லா முதலமைச்சரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் ஏதாவது ஒரு விஷயத்திற்கு சந்திக்க வேண்டும் என அப்பாயின்மென்ட் கேட்போம். மற்ற முதலமைச்சர்கள் என்றால் நிச்சயம் சந்திக்க 3 நாட்களாவது ஆகியிருக்கும். ஆனால் விஜயகாந்த் கேட்டால் அடுத்த 5வது நிமிடத்தில் எப்போது வர வேண்டும் என்ற பதில் கிடைக்கும். ஏதாவது ஒரு வேண்டுகோள் விடுத்தால் காலையில் 6 மணிக்கு கருணாநிதியே போனில் நேரடியாக தொடர்பு கொள்வார். எனக்கு அதைக் கண்டு ஆச்சரியமாக இருப்பார்.

திமுக கூட்டணியில் தேமுதிக

அந்த நாட்களை நான் நினைக்கும்போது ஏன் இவ்வளவு நாட்களாக திமுக - தேமுதிக கூட்டணி அமையவில்லை என உண்மையிலேயே நான் ஃபீல் பண்ணுகிறேன். தவறான கூட்டணியில் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறோமோ என்ற கேள்வி தான் எழுகிறது. இப்போதான் வழி பிறந்திருக்கிறதோ என தோன்றுகிறது. கருணாநிதி, விஜயகாந்த் என்ற இரண்டு தெய்வங்கள் மேலே இருந்து ஆசி வழங்குவதால் தான் இன்றைக்கு இந்த கூட்டணி அமைந்திருக்கிறது. குடும்ப உறவு, கூட்டணி உறவாக மாறியிருக்கிறது. 234 தொகுதிகளிலும் நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். தேமுதிகவில் விருப்பமனு வழங்கிய மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அண்ணி எங்க தொகுதியில போட்டி போடுங்க என சொன்னார்கள். எல்லார் சொல்வதையும் நான் கேட்பேன். ரொம்ப நிதானித்து நான் விருதாச்சலத்தை தேர்வு செய்தேன். இது கேப்டன் விஜயகாந்த் முதல்முதலில் போட்டியிட்ட தொகுதியாகும்" என தெரிவித்தார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu