Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rameswaram Vande Bharat : சென்னை டூ ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் ரெடி.! எப்போது தொடக்கம்.? எங்கெங்கு நிற்கும்.? குஷியான நியூஸ் இதோ..

Rameswaram Vande Bharat : சென்னை டூ ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் ரெடி.! எப்போது தொடக்கம்.? எங்கெங்கு நிற்கும்.? குஷியான நியூஸ் இதோ..

ABP Nadu 1 week ago

ராமேஸ்வரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

மிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் ஆன்மிக பக்தர்களை அதிகமாக ஈர்க்கும் சுற்றுலா இடமாக ராமேஸ்வரம் திகழ்ந்து வருகிறது.

ராமேஸ்வரம் தீவை சுற்றி ஏராளமான கோயில்களும், அழகிய கடற்கரைகளும் உள்ளதால் தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். அதிலும் ராமேஸ்வரம் என்றாலே மக்களுக்கு நினைவிற்கு வருவது முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் தான், அந்த வகையில் அவர் வாழ்த்த வீடு, அவரது நினைவிடம் ஆகியவற்றைப்பார்ப்பதற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை

மேலும் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் செல்லவும், ரயிலை பார்ப்பதற்காகவும் மக்கள் அதிகளவில் திரள்வார்கள். இந்த நிலையில் ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து தினமும் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில்கள் 12 முதல் 13 மணி நேரம் பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவாக சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப இந்த வழித்தடம் மின்மயமாக்கும் பணியும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. எனவே எப்போது இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ராமேஸ்வரம் 13 மணி நேர ரயில் பயணம்

அந்த வகையில் தற்போது 12 முதல் 13 மணி நேரம் இயக்கப்பட்டு வரும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வந்தே பாரத் ரயில் மூலம் 9 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை சென்று சேர முடியும். எனவே கடந்த ஜனவரி மாதமே இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணியானது நடைபெற்று வந்தது. அந்த பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி

அந்த வகையில் பிரதமர் மோடி செப்டம்பர் 2 வது அல்லது 3வது வாரம் ராமேஸ்வரம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ஓலைக்குடாவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 108 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். எனவே அப்போது மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார். எனவே ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தையும், சென்னை முதல் ராமேஸ்வரம் வரை வந்தே பாரத் சேவையையும் தொடங்கிவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் நேரம் என்ன.?

வந்தே பாரத் ரயிலானு காலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பு இரவு 10.20 மணிக்கு சென்னையை வந்தடையும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 130 கி.மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் ரயில் நிற்கும்.?

சென்னை - சென்னை இடையே 8 ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என கூறப்படுகிறது. தாம்பரம் – விழுப்புரம் – திருச்சி – புதுக்கோட்டை – காரைக்குடி – சிவகங்கை – மானாமதுரை – ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லவுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற செப்டம்பர் மாதம் எந்த தேதியில் ரயில் சேவையை தொடங்கிவைக்கவுள்ளார் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என ரயில்வே வட்டார தகவல்களாக உள்ளது.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu