Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.22,200 அதிரடி தள்ளுபடியில் புதிய Galaxy S26 - அமேசானில் மாஸ் சலுகை!

சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.22,200 அதிரடி தள்ளுபடியில் புதிய Galaxy S26 - அமேசானில் மாஸ் சலுகை!

ABP Nadu 1 week ago

Samsung Galaxy S26 Price Drops to Rs. 57,799 on Amazon: சாம்சங் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியாக, அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S26 போனுக்கு அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய சாம்சங் ஸ்மார்ட்போன்களை வைத்துப் புதிய ஃபிளாக்ஷிப் போனுக்கு மாற நினைப்பவர்களுக்கு இந்தச் சலுகை ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

எக்ஸ்சேஞ்ச் சலுகையும் புதிய விலையும்

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S26 போனின் அறிமுக விலை ரூ. 79,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களிடம் பயன்பாட்டில் உள்ள பழைய சாம்சங் கேலக்ஸி S24 போனை (8GB RAM / 256GB Storage) எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது அதிகபட்சமாக ரூ. 22,200 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் மதிப்பில் போனை வாங்கும் போது, சாம்சங் கேலக்ஸி S26 போனை வெறும் ரூ. 57,799 என்ற மிகக் குறைந்த விலையில் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

மற்ற சாம்சங் மாடல்களுக்கான தள்ளுபடி விவரம்

கேலக்ஸி S24 பயனர்களுக்கு மட்டுமின்றி, சாம்சங் கேலக்ஸி S25, கேலக்ஸி A36 மற்றும் கேலக்ஸி A56 போன்ற பிற மாடல்களை வைத்திருப்பவர்களுக்கும் இதற்கு இணையான நல்ல எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அமேசான் பக்கத்தில் உள்ள 'With Exchange' விருப்பத்தை தேர்வு செய்து, தங்களது போனின் மாடல் மற்றும் நிலையைக் குறிப்பிட்டுப் பெறக்கூடிய இறுதித் தள்ளுபடி தொகையை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி S26 போனின் சிறப்பம்சங்கள்

இந்தச் சலுகையில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி S26 ஸ்மார்ட்போன், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.3-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் சக்திவாய்ந்த பிளாக்ஷிப் பிராஸசர், 12GB RAM மற்றும் 512GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. கேமராவைப் பொறுத்தவரை, 50MP முதன்மை கேமரா, 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் அடங்கிய ட்ரிபிள் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 167 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த போன் IP68 வாட்டர் அண்ட் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 4,300mAh பேட்டரி பேக்கப் உடன் வருகிறது.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu