Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி  நன்றி

சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

ABP Nadu 1 week ago

டந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சேலம் மாவட்டம் எப்போதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அசைக்க முடியாத கோட்டை என்பதை அத்தொகுதி மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.

பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைத்தளப் பதிவில், சேலம் மாவட்ட மக்களுக்கும், குறிப்பாக தனக்கு இமாலய வெற்றியைத் தேடித்தந்த எடப்பாடி தொகுதி வாக்காளர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கியுள்ளார்.

சவால்களைத் தவிடுபொடியாக்கிய வரலாற்று வெற்றி

தேர்தல் களம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிமுக சேலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளதை இந்த வெற்றி காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடியில் மெகா வெற்றி

நடப்பு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 98,200 வாக்குகள் என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தன் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள், தனக்கு இந்த இமாலய வெற்றியை பரிசாக அளித்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு நன்றி

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பெருமளவில் வாக்களித்து, கழகத்தின் மீது தங்களின் பேராதரவை வெளிப்படுத்திய வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் அதிமுக பெற்ற இந்த அசுர வளர்ச்சி மற்றும் வெற்றி, அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author : ஜேம்ஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu