Dailyhunt
Selvaperunthagai Congress : தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்

Selvaperunthagai Congress : தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்

ABP Nadu 1 week ago

ஆட்சியை பிடிப்பது யார்.?

மிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

எனவே யார் ஆட்சியை கைப்பற்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டியானது ஏற்பட்டது. திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை திமுக- அதிமுகவின் வாக்குகளை பிரித்துள்ளது. இதன் காரணமாக யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியான கருத்து கணிப்பில் திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளும் பெரும்பான்மை பெரும் என பல்வேறு கருத்துகணிப்புகள் கூறியுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.?

எனவே இந்த தேர்தல் முடிவுகளின் வெற்றி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற வகையில் அரசியல் கட்சிகள் உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கா.?

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள மே தின தூணில் மரியாதை செலுத்திய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி, தமிழ்நாடு மக்கள் தெளிவாக உள்ளனர், 200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பாசிச ஆட்சிக்கு எந்த காலத்திலும் தமிழகத்தில் இடமில்லை என தெரிவித்தார். திமுகவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கேள்விக்கு, தேர்தல் முடிவு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என செல்வப் பெருந்தகை கூறினார்.மேலும் தனது இல்லத்தில் ஐடி அதிகாரிகள் சோதனையிட வந்ததாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி அதிகாரிகள் செல்வப் பெருந்தகை மீது புகார் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், எந்த புகாரையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறினார்.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu