Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவனத்தில் 27 வேலைகள்: 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை வாய்ப்பு!

சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவனத்தில் 27 வேலைகள்: 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை வாய்ப்பு!

ABP Nadu 1 week ago

சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவன வேலை வாய்ப்பு; 27 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை என்ன?

விண்ணப்பிப்பது எப்படி? என்ற முழு விபரம் தெரிந்துகொள்ளலாம்

சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் மனநல நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.07.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: UG, PG in Psychology, M.Phil. Clinical Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 55,000

Counsellor/ General psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: UG, PG in Psychology/ Rehabilitation Psychology/ Clinical Psychology/ Health Psychology/ Child Psychology/ Counselling Psychology/ Applied Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Psychiatry Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Master's in Medical & Psychiatric Social Work படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Statistician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: PG in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Accountant cum data entry operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B. Com, Tally படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

Psychiatry support worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Certificate course in psychiatry supportive worker படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director, Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai-10.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2026

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu