சிவகங்கை, கொல்லங்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.
36.72 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
கதிரேசன் கமலாவதி திருமண மண்டபம்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம், நாட்டரசன் கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, கொல்லங்குடி கிராமத்திலுள்ள ”கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்தில்” நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் தப.ஆகாஷ், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களின் கோரிக்கை
பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றையதினம் காளையார் கோவில் வட்டம், நாட்டரசன் கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில், தகுதியுடைய 170 முன்னோடி மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறயதினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பெறப்படும் மனுக்கள் மீது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
மேலும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்துறையைச் சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, அதன் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தப.ஆகாஷ், தெரிவித்தார்.
வருவாய்த்துறை சார்பில், 76 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள்
இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறை சார்பில், 76 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.7,18,500- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.32,000- மதிப்பீட்டிலான மருந்துப் பெட்டகங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.1,49,475- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.1,28,376/- பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்குரூ.48,430- பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.21.46,153- மதிப்பீட்டிலான காசோலைகளையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) கீழ் 09 பயனாளிகளுக்கு ரூ.4.50- இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், அவர்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
Author : அருண் சின்னதுரை

