தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு திரைப்படங்களை வழங்கும் நோக்கில் பாலமுருகன்.அ தலைமையில் உருவாகியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் 'டிராமா கம்பெனி' இப்படத்தை தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வித்தியாசமான கதைக்களம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகாரம் ஆகியோருடன் ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் மூலம் பிரபலமான யோகலட்சுமி, பிக் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஆடை வடிவமைப்பை சுவாதி ராமகிருஷ்ணன் கவனிக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Author : ராகேஷ் தாரா

