Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்தி வைத்தாரா முதல்வர் விஜய்? சிங்கப்பெண் துவக்கவிழா ரத்தானது ஏன்?

சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்தி வைத்தாரா முதல்வர் விஜய்? சிங்கப்பெண் துவக்கவிழா ரத்தானது ஏன்?

ABP Nadu 2 weeks ago

மிழக முதல்வர் விஜய் கடந்த மே 29 ஆம் தேதி தனது செயலாளர் ஜகதீஷ் பழனிச்சாமியில் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டார்.

ஆனால் இதே நாளில் முதல்வர் தலைமையில் துவக்கிவைக்கப்பட இருந்த சிங்கப்பெண் அதிரடி படை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்வர் விஜய் தனது சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்திவைத்தாரா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இரண்டாவது முறை ரத்தான சிங்கப்பெண் அதிரடி படை திட்டம்

பெண்களை பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். முதல்வராக பொறுப்பேற்றபோது கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்றுதான் இந்த சிங்கப்பெண் அதிரடி திட்டம். கடந்த 26 ஆம் தேதி ஐஜி தலைமையில் இந்த திட்டம் துவக்கிவைக்கப்பட இருந்தது. இதே நாளில் முதல்வர் விஜய் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற காரணத்தால் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்னம் மைதானத்தில் இந்த திட்டம் துவக்கிவைக்கப்பட இருந்தது. முதல்வரே நேராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கி வைக்க இருந்த லையில் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமாக தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் சிங்கப்பெண் அதிரடி திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதே திட்டத்தை துவங்கி வைக்க இருந்த நேரத்தில் முதல்வர் விஜய் தனது தனிச் செயலாளர் மற்றும் ரூப் பிஆர் ஏஜன்சியின் உரிமையாளரான ஜகதீஷ் அவர்களின் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது

ஜகதீஷ் இல்ல விழாவில் முதல்வர் விஜய்

விஜய் நடிகராக இருந்தபோது அவரிடம் பல ஆண்டுகளாக மேனேஜராஜ பணியாற்றியவர் தான் ஜகதீஷ் பழனிச்சாமி. சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று விஜய் அரசியலுக்கு வரவே ஜகதீஷ் ரூட் என்கிற நட்சத்திர பிஆர் ஏஜன்சி ஒன்றை நடத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் , அனிருத் , கீர்த்தி சுரேஷ் , கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த ஏஜன்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். ஜகதீஷ் தற்போது நீலாங்கரையில் பல கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டு குடிபுகும் விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வழக்கமான கோட் சூட் அணியாமல் முதலவர் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சிங்கப்பெண் அதிரடி திட்டம் துவக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா என தவெக ஆதரவாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக ஒரு ஐஜி தலைமையில் ஒரு எஸ்.பி மற்றும் 2 டி.எஸ். பி, 4 காவல் ஆய்வாளர்கள் , 8 எஸ்.ஐ- க்கள் மற்றும் 20 காவலர்கள் இந்த சிறப்பு படையில் இடம்பெறுவார்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டது. முதல்வர் விஜயின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த குழு செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu