தி கோட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கவிருந்தார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சிவகார்த்திகேயன் சம்பளம் காரணமாக படம் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. சிவகார்த்திகேயன் படத்தில் ஆர்வம் காட்டாத காரணத்தினால் தனுஷூடன் இயக்குநர் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் வெங்கட் பிரபு கூட்டணி குறித்து தனது தனது எக்ஸ் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை 28 , சரோஜா என தனது சகோதரர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்களை வைத்து தரமான கமர்சியல் திரைப்படங்களை கொடுத்தவர் வெங்கட் பிரபு. அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை இயக்கி தன்னால் மாஸ் ஹீரோ கதைகளையும் இயக்கமுடியும் என நீரூபித்து காட்டினார். அஜித்தை தொடர்ந்து ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக விஜயின் தி கோட் திரைப்படத்தை இயக்கினார். இதே சமயத்தில் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததால் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
சிவகார்த்திகேயன் உடன் என்ன பிரச்சனை ?
தி கோட் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருந்தார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நாயகனாக நடிக்கவிருந்தார். சத்யஜோதி இந்த படத்தை தயாரிக்கவிருந்தது. சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது . அதே நேரம் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு கேட்ட சம்பளமும் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துவராத காரணத்தினால் இப்படம் அடுத்தகட்டத்தை நோக்கி நகராமல் இருந்தது. அதே நேரம் சிவகார்த்திகேயன் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வேறு வழியில்லாத காரணத்தினல் வெங்கட் பிரபு தனது படத்தின் ஹீரோவையே மாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது
தனுஷ் கொடுத்த ஹிண்ட்
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தனுஷிடம் இந்த கதை வெங்கட் பிரபு கூறியிருப்பதாக தனுஷிற்கு கதை பிடித்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியபடி இருந்தன. இந்த நிலையில் தனுஷ் வெங்கட் பிரபு கூட்டணி குறித்து தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தனது அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் தனுஷ் .
Author : ராகேஷ் தாரா

