Dailyhunt
Tamil Nadu New DGP:  தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?

Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?

ABP Nadu 2 weeks ago

மிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இருந்த நிலையில் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டின் டிஜிபியாக பொறுப்பேற்கிறார். தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பில்லை என்றும், பிரச்சாரத்தின்போது சரியான போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தவெக சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில் டிஜிபியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதேபோல், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுரை காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித்தை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல காவல்துறை ஐஜியாக ரம்யா பாரதியை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்கள்

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu