எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஏபிபி நாடுக்கு கொடுத்த பேட்டியில் உறுதியாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஏபிபி நாடுக்கு கொடுத்த பேட்டியில் உறுதியாக தெரிவித்தார்.
18 மாநிலங்களில் உள்ள டபுள் என்ஜின் அரசு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது போல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்து பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றும், 4-ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் நல்லதை அருள்வார்கள் என்றார்.
4ஆம் தேதி வரை காத்திருங்கள்
கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்கு, கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியாக உள்ளதா, ஒரு மாதிரியாக உள்ளதா என இழுவையாக கேள்வி எழுப்பிய தமிழிசை, exit polls are not exact polls, எனவும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல எனவும் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.

வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றும், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை என்றார்.
சிலிண்டர் விலை உயர்வு தற்காலிகமே
வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே என கூறினார். 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு, போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் நமது நாட்டை பிரதமர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளார் என கூறினார்.
திமுகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வந்தால், உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விக்கு, மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்குகளை தந்திருப்பார்கள் என நம்புவதாக பதில் அளித்தார்.
Author : ராஜேஷ். எஸ்