Dailyhunt
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை

ABP Nadu 1 week ago
  • சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டு தரும் பணியை வரும் 10ம் தேதி முதல் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டம்
  • தமிழ்நாட்டில் இதுவரை 3,000 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,000 பேர் வேட்புமனு! நாளையுடன் மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது
  • வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவு - மேலூர் தொகுதிக்கு இதுவரை வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி
  • மக்கள் என்ன பிரச்னைகளை சொல்கிறார்களோ அதை தவெக ஆட்சி அமைந்ததும் தீர்த்து வைப்போம்" - தியாகராய நகர் தொகுதி தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி
  • தனக்கு ரூ.410 கோடி அசையும் சொத்து இருப்பதாக, நேற்று (ஏப்.4) தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் தவெக தலைவர் விஜய் தெரிவிப்பு - முன்னதாக ரூ.404 கோடி அசையும் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ரூ.6 கோடி மதிப்பிலான பிரசார வாகனத்தையும் கணக்கில் காட்டியுள்ளார்
  • தமிழ்நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  • போளூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் T. P. சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்
  • 50% சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்வேன்: மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் பிரச்சாரம்
  • அரியலூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இடைவிடாது பிரச்சாரம் செய்த சீமான்.. மழையில் நனைந்து கொண்டு பேச்சைக் கேட்ட பொதுமக்கள்
  • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ரூ.9.47 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
    உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை
  • பங்குனி பெருவிழாவையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்; 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu