Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Tamilnadu Round Up: காங்கிரஸ்? அதிமுக? விஜய்க்கு ஆதரவளிக்கப்போவது யார்? உயர்ந்த தங்கம் விலை - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: காங்கிரஸ்? அதிமுக? விஜய்க்கு ஆதரவளிக்கப்போவது யார்? உயர்ந்த தங்கம் விலை - தமிழ்நாட்டில் இதுவரை

ABP Nadu 2 weeks ago
  • தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்.. த.வெ.க. அமைச்சரவை பட்டியலில் யார் இடம்பிடிப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு
  • தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை
  • சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக இன்று காலை கூட இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து - தவெகவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் கூட்டம் ரத்து என தகவல்.
  • அதிமுக எதிர்க்கட்சியாக வரமுடியாத நிலையில் இபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏக்கள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிக்க முடிவு
  • ஆட்சியமைக்க ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக கடிதம் - அவசர செயற்குழு கூட்டியது CPI
  • தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு தராது என காதர் மொகிதீன் திட்டவட்டம் - கூட்டணியின் தலைமையான திமுகவின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என அக்கட்சி அறிக்கை
  • ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் சென்னையில் இன்று காலை கூடுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
  • த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் நேரம் கேட்டுள்ளதாக தகவல்
  • ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காரில் தொங்கியபடி TVK, TVK என விசில் அடித்து சென்ற 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
  • தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவிற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல்

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu