Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை: தேனி, கோவை, நீலகிரிக்கு இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!..

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை: தேனி, கோவை, நீலகிரிக்கு இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!..

ABP Nadu 1 week ago

மிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3 (வெள்ளிக்கிழமை): கோயம்புத்தூர் மாவட்டத்தின் பள்ளிப்புதூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 4 (சனிக்கிழமை): கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ. வேகத்திலான பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 5 மற்றும் 6: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 7: பெடா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 8: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழ்நாட்டின் சில இடங்கள் மற்றும் புதுவையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu