Dailyhunt
தமிழில் முதல்முறையாக நான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்..நடிகை மாளவிகா தகவல்

தமிழில் முதல்முறையாக நான் நடித்த படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்..நடிகை மாளவிகா தகவல்

ABP Nadu 1 week ago

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சீமான் , எஸ்.ஜே சூர்யா , மிஷ்கின் , மாளவிகா , கெளரி கிஷன் , க்ரித்தி ஷெட்டி , யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது . நீண்ட நாட்களுக்குப் பின் நடிகை மாளவிகா எல்.ஐ.கே படத்தில் மூலம் தமிழுக்கு திரும்பியுள்ளார். இந்த படத்திற்காக முதல்முறையாக தானே தப்பிங் பேசியுள்ளதாக மாளவிகா தெரிவித்தார்.

தமிழில் முதல்முறையாக டப்பிங் பேசிய மாளவிகா

என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன் இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.

பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை. இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி." என்றார்

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu