விழுப்புரம் : வாக்களித்த மக்களையே ஏமாற்றுகிற வகையில் தமிழ்நாட்டில் குதிரை சண்டை என்ற புதிய வளர்ச்சி நடப்பதாகவும் அதற்கு நல்ல விலைகள் கிடைப்பதாகவும், வாக்கு வாங்கிய மனிதர்களுக்கு அதிக விலை கிடைப்பதாக திராவிடர் கழக தலைவர் கி.
வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கலந்து கொண்டு சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி ஆதிதிராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட ஒரு ஜாதியின் பிரிவாக இருப்பதால் மற்றவர்களை இணையமுடியாத சூழல் உண்டு அதற்கு விரிவான பொருள் உண்டு அயோத்திய தாசர் போன்றவர்கள் கூட திராவிடம் என்பது ஒரு அடையாளம் என சொன்னார்கள் சமூக நீதி முதலில் வழங்க வேண்டும் என்றால் ஆதிதிராவிடர்களுக்கு தான் வழங்க வேண்டும்,
சமூக அநீதியினால் தான் ஆதிதிராவிடர் என்றார்கள் சமூக அநீதியை போக்குவதற்கு தான் ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கு மட்டும் வருகிறது என்பதால் திராவிடர் என்பது தவிர்க்கபட கூடாது நீண்ட கால மாக உள்ளது வரலாற்று பெயர் என குறிப்பிட்ட அவர் ஆதிதிராவிடர் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தை மட்டும் காண்பிக்கவில்லை தனிப்பட்ட சமூக அநீதியினாலையே ஒதுக்கப்பட்டதை காட்டுவதால் சமூக நீதி என்று விடுதிகளுக்கு பெயர் வைக்கலாம் ஆனால் சமூகநீதி என துறையை சொல்வது பரவலாகும் ஆனால்
பிற்படுத்தப்பட்டோர் துறை என்பது சமூகநீதி தான் பாலியல் நீதி என்றாலும் சமூக நீதி என்பதால் இதில் உள்ள சிறுகுழப்பங்களை போக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனி சட்டம் உண்டு தனித்தனி விதி உண்டு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு ஆக்கி நிதியையே கொடுக்காமல் மான்ய குழு என்று உள்ளே நுழைவது தவறு அரசியல் சட்டம் விரோதம் என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மாட்டுச்சந்தை உண்டு ஆட்டு வியாபாரம் உண்டு இப்போது தான் அன்மையில் குதிரை சண்டை ஏற்பாடு செய்திருக்கிறது குதிரை சண்டை எப்போதாவது எங்கையேயாவது நடக்க கூடியது அரேபிய போன்ற இடங்களில் நடக்க கூடியது ஆனால் இப்போது மலிவாக எல்லோரும் பார்க்க கூடிய வகையில் நடக்கிறது வாக்களித்த மக்களையே ஏமாற்றுகிற வகையில் புதிய வளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்குகிறது என்றால் குதிரை சண்டை நடக்கிறது தமிழ்நாட்டில் நல்ல விலைகள் கிடைப்பதாகவும், அதிகமான விலைகள் மனிதர்களுக்கு விலை கிடைக்கிறது குறிப்பாக வாக்கு வாங்கிய மனிதர்களுக்கு அதிக விலை கிடைப்பதாக குற்றஞ்சாட்டினார்.
Author : சிவரஞ்சித்

