இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் டாடா. ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு மாதந்தோறும் தள்ளுபடி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளது.
ஜுன் மாதத்திற்கான கார் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
தள்ளுபடி:
அதன் விவரத்தை கீழே காணலாம்.
1. Tata Curvv - ரூபாய் 1.2 லட்சம்
2. Tata Nexon - ரூபாய் 60 ஆயிரம்
3. Tata Altroz - ரூபாய் 55 ஆயிரம்
4. Tata Harrier - ரூபாய் 45 ஆயிரம்
5. Tata Safari - ரூபாய் 45 ஆயிரம்
6. Pre-facelift Tata Tiago - ரூபாய் 35 ஆயிரம்
7. Tata Tigor - ரூபாய் 30 ஆயிரம்
8. Tata Sierra - ரூபாய் 25 ஆயிரம்
Tata Curvv:
டாடாவின் எஸ்யூவி காரான Tata Curvv காருக்கு ரூபாய் 1.2 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 40 ஆயிரமும், லாயல்டி ஆஃபராகவும் ரூபாய் 50 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த கூபே எஸ்யூவி காரின் தொடக்க விலை ரூபாய் 9.76 லட்சம் முதல் தொடங்குகிறது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 18.96 லட்சம் ஆகும்.
Tata Nexon:
டாடா-வின் Tata Nexon காருக்கு ரூபாய் 60 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 10 ஆயிரமாகவும், ஸ்க்ராப்பேஜ் தள்ளுபடி ரூபாய் 20 ஆயிரமும், இன்டர்வென்ஷன் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வெர்சனுக்கும் இதே தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை காரான இந்த Tata Nexon கார் ரூபாய் 7.37 லட்சம் முதல் ரூபாய் 13.70 லட்சம் வரை விற்கப்படுகிறது.
Tata Altroz:
டாடாவின் Tata Altroz காருக்கு ரூபாய் 55 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், ஸ்க்ராப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அளிக்கப்படுகிறது. இந்த காரின் சிஎன்ஜி வெர்சனுக்கும் இதே தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளத. Tata Altroz டீசல் காருக்கும் இதே தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 6.3 லட்சம் முதல் ரூபாய் 10.65 லட்சம் வரை அளிக்கப்படுகிறது.
Tata Harrier:
டாடாவின் Tata Harrier காருக்கு ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதில் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 10 ஆயிரமும், ஸ்க்ராப்பேஜ் தள்ளுபடி ரூபாய் 35 ஆயிரமும் அளிக்கப்படுகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13 லட்சம் முதல் ரூபாய் 24.25 லட்சம் ஆகும்.
Tata Safari:
டாடாவின் புகழ்பெற்ற இந்த Tata Safari காருக்கு ஜுலை தள்ளுபடியாக ரூபாய் 45 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இநத காரின் தொடக்க விலை ரூபாய் 13.40 லட்சம் ஆகும்.
Pre-facelift Tata Tiago:
Pre-facelift Tata Tiago காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரமும், ஸ்க்ராப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், இன்டர்வென்ஷன் ஆஃபர் ரூபாய் 5 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது.
Tata Tigor:
டாடாவின் Tata Tigor காருக்கு ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூபாய் 15 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியாகவும், ஸ்க்ராப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 5.55 லட்சம் முதல் ரூபாய் 8.84 லட்சம் வரை விற்கப்படுகிறது.
Tata Sierra :
டாடாவின் Tata Sierra காருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த கார் மிகவும் புகழ்பெற்ற கார் ஆகும். இந்த கார் ரூபாய் 11.49 லட்சம் முதல் ரூபாய் 21.29 லட்சம் வரை விற்கப்படுகிறது.
Author : சுகுமாறன்

